Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silver Price : சரசரவென உயரும் வெள்ளி விலை.. முதலீடு செய்வது சிறந்ததா?

Is It Best To Invest in Silver | 2025 ஆம் ஆண்டு வெள்ளிக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Silver Price : சரசரவென உயரும் வெள்ளி விலை.. முதலீடு செய்வது சிறந்ததா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Oct 2025 14:49 PM IST

2025 ஆம் ஆண்டு தங்கத்துக்கு (Gold) மட்டுமன்றி வெள்ளிக்கும் (Silver) சிறந்த ஆண்டாக உள்ளது. காரணம், 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே வெள்ளி விலை மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு ரூ.100-க்கும் குறைவாக இருந்த வெள்ளி, தற்போது ரூ.200-க்கு நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வெள்ளியும் தங்கத்தை போலவே மிக கடுமையான விலை உயர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வெள்ளி தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், பலர் அதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?

தொழில்நுட்ப துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. பேட்டரி, சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் என பல பொருட்களை தயாரிக்க வெள்ளி மூல பொருளாக உள்ளது. இதேபோல தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த காரணிகளால் வெள்ளியின் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மிக கடுமையான உயர்வை சந்திக்க இவை மிக முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Gold Price: எகிறும் தங்கம் விலை.. அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா?

இந்திய பொதுமக்கள் மத்தியில் தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது என்ற எண்ணம் உள்ளது. கடந்த சில மாதங்களில் தங்கம் விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்த நிலையில், பொதுமக்கள் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்யும் அளவுக்கு போதுமான பொருளாதாரம் இல்லை என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் வெள்ளி கட்டிகளில் முதலீடு செய்கின்றனர். வெள்ளியில் அதிக அளவு கழிவு இருக்காது. அது மிகவும் தரம் வாய்ந்ததாகவே இருக்கும். எனவே வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!

தங்கத்தை போலவே வெள்ளி ஈடிஎஃப்பில் (ETF – Exchange Trade Fund) முதலீடு செய்யலாம். இது வெள்ளியை ஆபரணங்களாகவும், கட்டிகளாகவும் வாங்குவதை விட சிறந்த பலன்களை கொடுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.