Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!

Silver Gets More Price Hike in 2025 | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. தங்கம் மட்டுமன்றி, தங்கத்திற்கு இணையாக வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. அதாவது 50 சதவீதம் வரை வெள்ளி உயர்வை சந்தித்துள்ளது.

Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2025 23:00 PM IST

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே உலக அளவில் தங்கம் விலை (Gold Price) அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத உச்சத்தில் தங்கம் விலை உள்ளது. தங்கம் தான் இப்படியென்றால் வெள்ளியும் (Silver) தங்கத்திற்கு இணையாக விலையேற்றம் அடைந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு வெள்ளி எவ்வளவு விலை உயர்ந்துள்ளது, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிக கடுமையான விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை

உலக அளவில் ஏற்படும் பொருளாதார மந்தநிலை, பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக தங்கம் விலை கடுமையான உயர்வை சந்திக்கும். காரணம், இத்தகைய சூழல்களில் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்குவர். அதுவே தங்கம் விலை கடுமையாக முக்கிய காரணமாக இருக்கு. ஆனால், 2025 ஆம் ஆண்டு ஆச்சர்யமூட்டும் விதமாக தங்கத்துக்கு இணையாக வெள்ளியும் விலையேற்றம் அடைந்துள்ளதுதான்.

இதையும் படிங்க : Gold Price : ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. ரூ.85,000-த்தை தாண்டியது.. பொதுமக்கள் கவலை!

50 சதவீதம் விலை உயர்வு அடைந்த வெள்ளி

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதாவது 2025-ல் மட்டும் தங்க  விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது. வழக்கத்திற்கு மாறாக 2025-ல் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 2025-ல் மட்டும் வெள்ளி விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதுதான் மிகவும் ஆச்சர்யமூட்டும் விதமாக உள்ளது. அதாவது 2025-ல் தங்கத்தை விட வெள்ளி கூடுதலாக 10 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : சிறிய கடைகள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமா? விதிகள் என்ன சொல்கிறது?

வெள்ளி விலை உயர்வுக்கு என்ன காரணம்

தற்போது உலக அளவில் மின்சார வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்சார வாகனங்களை தயாரிக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றாக வெள்ளி உள்ளது. இதுதவிர சில மின்சாத பொருட்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலக அளவில் பல துறைகளில் வெள்ளி நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதுவே வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி இத்தகைய விலை உயர்வை கண்டுள்ள நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற உதவும் என பொருளாதார வல்லுநர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.