Gold Price : ஷாக் அடிக்கும் தங்கம் விலை.. ரூ.85,000-த்தை தாண்டியது.. பொதுமக்கள் கவலை!
Gold Price Crossed 85,000 Rupees | தங்கம் வரலாறு காணாத உச்சத்தை கண்டு ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.85,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டிய நிலையில் அடுத்த சில நாட்களிலேயே ரூ.85,000-த்தை தாண்டியுள்ளது.

சென்னை, செப்டம்பர் 27 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களுக்கு முன்பு சவரன் ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 27, 2025) ஒரு சவரன் ரூ.85,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரலாறு காணாத உச்சத்டை அடைந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரசரவென உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 06, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 27, 2025) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.85,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை எத்தகைய கடுமையான விலை ஏற்றத்தை கண்டுள்ளது என்பது குறுத்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : உங்கள் ITR Refund கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதா?.. அப்போ உடனே இத பண்ணுங்க!
10 நாட்களில் அபார விலை உயர்வை அடைந்த தங்க
- செப்டம்பர் 18, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கு ஒரு சவரன் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 19, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கு ஒரு சவரன் ரூ.81,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 20, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,290-க்கு ஒரு சவரன் ரூ.82,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 21, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,290-க்கு ஒரு சவரன் ரூ.82,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 22, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,430-க்கு ஒரு சவரன் ரூ.83,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 23, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கு ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 24, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கு ஒரு சவரன் ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 25, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,510-க்கு ஒரு சவரன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 26, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,550-க்கு ஒரு சவரன் ரூ.84,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- செப்டம்பர் 27, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கு ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!
இன்றைய தங்கம் நிலவரம்
இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.