Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Sovereign Gold Bonds 338 Percentage Profit | மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 338 சதவீதம் லாபம் பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.

GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2025 17:06 PM IST

தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்வது சிறந்த லாபத்தை தரும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால், தங்கத்தை விடவு அதிக லாபம் தரும் முதலீடு ஒன்று உள்ளது. அது தான் தங்க பத்திரம் (Gold Sovereign Bond). இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்க நகைகளில் முதலீடு செய்வதை விடவும் அதிக லாபத்தை பெற முடியும். இந்த தங்க பத்திரங்களை அரசு வெளியிடும் நிலையில், அது மிகுந்த பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் எவ்வளவு லாபம் பெறுவார்கள் என்பது தொடர்பாக தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்க பத்திர முதலீடு என்றால் என்ன?

தங்க பத்திர முதலீடு என்பது ஒரு வகையான தங்க முதலீடு ஆகும். தங்கத்தை ஆபரணமாக அல்லது நாணயங்களாக வாங்குவதை விடவும் இது சற்று வித்தியாசமான முதலீடு ஆகும். 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தியாவில் தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு நான்கு முறை தங்க பத்திரத்தை அரசு இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ஒரு கிராமுக்கு இவ்வளவு என குறிப்பிட்டு இந்த தங்க பத்திரத்தை வெளியிடும். அவ்வாறு வெளியிடப்படும் தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகளில் முதிர்வடையும். தங்க பத்திரம் முதிர்வடையும்போது அன்றைய நாளில் தங்கம் விலை என்னவாக உள்ளதோ அதே அளவு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.

இதையும் படிங்க : தங்கத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. வல்லுநர்கள் கூறும் சூப்பர் டிப்ஸ்!

338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்

2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கான பத்திரங்கள் நேற்று (அக்டோபர் 16, 2025) முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், அப்போது முதலீடு செய்தவர்கள் எவ்வளவு லாபம் பெறுவார்கள் என்பது குறித்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது 2017-ல் முதலீடு செய்தவர்கள் இன்று (அக்டோபர் 17, 2025) முதல் முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.12,567 முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : Gold Price: எகிறும் தங்கம் விலை.. அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

2017 ஆம் ஆண்டு ரூ.2,866-க்கு ஒரு கிராம் வாங்கியவர்களுக்கு தற்போது ஒரு கிராமுக்கு ரூ.12,576 கிடைக்க உள்ளது. அதாவது ரூ.9,701 கூடுதலாக கிடைக்கும். அதன்படி தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் 338 சதவீதம் லாபம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.