Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : இனி 100% பணத்தை எடுக்கலாம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய முடிவு!

EPF Money Withdrawal | ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எளிமையாக எடுக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இனி 100% பணத்தை எடுக்கலாம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய முடிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2025 13:21 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு துறை ஊழியர்களின்  நலனை கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது ஊழியர்களுக்கு மேலும் சிறந்த பலன்களை வழங்கும் முக்கிய முடிவை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எடுத்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எடுத்த முக்கிய முடிவு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அரங்காவலரகள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் ஊழியர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்பு நிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Ration Card : இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.. இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!

ஊழியர்கள் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்

மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், வீட்டு தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட வைப்பு நிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு கல்விக்கு 10 மடங்கும், திருமணத்துக்கு 5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar Card : பயோமெட்ரிக் அப்டேட்.. ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. UIDAI அசத்தல் அறிவிப்பு!

இந்த சூழல்களில் தெரிவிக்காமல் பணம் எடுக்கலாம்

இயற்கை சீற்றம், நிறுவனம் மூடல், தொடர் வேலையின்மை, தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட சூழல்களில் காரணம் தெரிவிக்காமல் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களது கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக 25 சதவீத பங்களிப்பை இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய மாற்றங்கள் காரணமாக ஊழியர்கள் பணத்தை எடுக்கும் நடைமுறை தற்போது மேலும் சுலபமாக மாறும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.