Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. EMI குறையபோகுது!

Banks Will Reduce EMI for Loans | இந்திய ரிசர்வ் வங்கி ஒரு ஆண்டில் மட்டும் 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக பல முன்னணி வங்கிகள் தங்களின் எம்சிஎல்ஆர் விகிதத்தை குறைத்துள்ளன. இதன் மூலம் மாத தவணை குறைய உள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. EMI குறையபோகுது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Oct 2025 15:59 PM IST

சமீப காலமாக இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் பண புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்து வருகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு சாமானிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காரணம், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் தங்களின் கடன் விகிதங்களை குறைத்து வருகின்றன. இதன் மூலம் சாமானிய மக்கள் அதிக பலனை அடையும் சூழல் உருவாகியுள்ளது.

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்

பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் தங்களின் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் விகிதங்களை குறைத்துள்ளன. வங்கிகள் மேற்கொண்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம் எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட கடன்களை வாங்கியுள்ள நபர்களின் மாத தவணை (EMI – Every Month Install) குறைய உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக இந்த வங்கிகள் கடன் விகிதங்களை குறைத்துள்ள நிலையில், வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாத தவணை குறைய உள்ளது.

இதையும் படிங்க : EPFO : இனி 100% பணத்தை எடுக்கலாம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய முடிவு!

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை அக்டோபர் 12, 2025 முதல் திருத்தியுள்ளது.

  • ஒரு நாள் எம்சிஎல்ஆர் – 7.85 சதவீதமாக உள்ளது
  • ஒரு மாத எம்சிஎல்ஆர் – 7.95 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக குறைந்துள்ளது
  • மூன்று மாத எம்சிஎல்ஆர் – 8.20 சதவீதமாக உள்ளது
  • ஆறு மாத எம்சிஎல்ஆர் – 8.65 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக குறைந்துள்ளது
  • ஒரு ஆண்டு எம்சிஎல்ஆர் – 8.80 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக குறைந்துள்ளது

இந்தியன் பேங்க்

இந்தியன் வங்கி அக்டோபர் 03, 2025 முதல் னது எம்சிஎல்ஆர் விகிதத்தை திருத்தியுள்ளது.

  • ஒரு நாள் எம்சிஎல்ஆர் – 8.05 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக குறைந்துள்ளது
  • ஒரு மாத எம்சிஎல்ஆர் – 8.30 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக குறைந்துள்ளது
  • மூன்று மாத எம்சிஎல்ஆர் – 8.45 சதவீதமாக உள்ளது
  • ஆறு மாத எம்சிஎல்ஆர் – 8.70 சதவீதமாக உள்ளது
  • ஒரு ஆண்டு எம்சிஎல்ஆர் – 8.85 சதவீதமாக உள்ளது

இதையும் படிங்க : தங்க நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் எது சிறந்தது?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை அக்டோபர் 12, 2025 முதல் திருத்தியுள்ளது.

  • ஒரு நாள் எம்சிஎல்ஆர் – 8.05 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளது
  • ஒரு மாத எம்சிஎல்ஆர் – 8.20 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக குறைந்துள்ளது
  • மூன்று மாத எம்சிஎல்ஆர் – 8.50 சதவீதமாக உள்ளது
  • ஆறு மாத எம்சிஎல்ஆர் – 8.70 சதவீதமாக உள்ளது
  • ஒரு ஆண்டு எம்சிஎல்ஆர் – 8.75 சதவீதமாக உள்ளது