AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?

திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Feb 2026 19:38 PM IST

பிப்ரவரி 10, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை அறிவித்து வரும் நிலையில், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை இன்னும் அறிவிக்காமல் உள்ளன. இந்தச் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு:

இந்த நிலையில், திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு..

இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை நேரில் சந்தித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

தவெக உடன் கைக்கோர்க்குமா காங்கிரஸ்?

மேலும், “தங்களுடன் கூட்டணி அமைத்து வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலான அதிகாரப் பங்கீடு வழங்கப்படும்” என விஜய் தெரிவித்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தான், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆட்சியிலான அதிகாரப் பங்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: விஜயுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா.. அறிவிப்பு எப்போது தெரியுமா? வெளியான தகவல்..

திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது:

இந்த பரபரப்பான சூழலில், திமுக உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்களுக்கு இடையே இணக்கமான நல்லுறவு நிலவி வருவதாகவும், திமுக – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Follow Us