Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Banks Offers Highest Interest Rates Senior Citizen FD | பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்கும் நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Oct 2025 22:01 PM IST

2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டியை (Repo Rate) மூன்று முறை குறைத்துள்ளது. இதன் காரணமாக பல வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது மட்டுமன்றி, நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்து வருகின்றன. இது முதலீடு செய்யும் நபர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Slice Small Finance Bank) மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) தனது மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்குகிறது. அதிக வட்டியுடன் கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிங்க : கடனே வாங்க வேண்டாம்.. இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்!

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) தனது மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

சிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Shivalik Small Finance Bank) தனது மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : வீட்டு கடனை அடைக்க EMI அதிகரிப்பது Vs ப்ரீ பேமெண்ட் செய்வது.. இரண்டில் எது சிறந்தது!

ரெப்போ வட்டி விகித குறைவு காரணமாக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாகவும் அதிக லாபம் வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.