Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டு கடனை அடைக்க EMI அதிகரிப்பது Vs ப்ரீ பேமெண்ட் செய்வது.. இரண்டில் எது சிறந்தது!

Increase EMI Vs Prepayment in Home Loan | வீட்டு கடனை எளிதாகவும், விரைவாகவும் அடைக்க இரண்டு வழிகள் உள்ளன. மாத தவணையை அதிகரிப்பது, ப்ரீ பேமெண்ட் செய்வது என இரண்டு வகைகள் உள்ளன. இந்த நிலையில், அவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

வீட்டு கடனை அடைக்க EMI அதிகரிப்பது Vs ப்ரீ பேமெண்ட் செய்வது.. இரண்டில் எது சிறந்தது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Oct 2025 14:24 PM IST

இந்தியாவை பொருத்தவரை சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பொதுமக்களின் கனவாகவும், ஆசையாகவும் உள்ளது. அதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து சிலர் தங்களது சொந்த வீடு கனவை நினைவாக்குவர். ஆனால், சிலருக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அவ்வளவு பணத்தை சேமிக்க முடியாது என்பதால் வங்கிகளில் வீட்டு கடன் (Home Loan) வாங்கி தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்வர். அந்த வகையில், வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கனவை நிறைவேற்றியவர்கள், வங்கி கடனை சுலபமாக அடைக்க முயற்சி செய்வர்.

வங்கி கடனை அதிக வட்டி செலுத்தாமல் அடைக்க இரண்டு சிறந்த வழிகள் உள்ளன. ஒன்று ஒவ்வொரு ஆண்டும் மாத தவணையை அதிகரிப்பது மற்றொன்று முன்கூட்டியே கடனை அடைப்பது. இந்த இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நீண்ட காலமாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், இவை இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாத தவணையை அதிகரிப்பது Vs முன்கூட்டியே கடனை அடைப்பது

பொதுமக்கள் தங்களுக்கு சிறந்த போனஸ் அல்லது சமபள உயர்வு கிடைக்கும்போது தாங்கள் கடன் அடைக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது முக்கியமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மாதாந்திர மாத தவணை தொகையை அதிகரிப்பதன் மூலம் கடனை திருப்பி செலுத்தும் காலம் குறையும். அதுமட்டுமன்றி, அந்த கடனுக்கு செலுத்தக்கூடிய வட்டியும் குறையும் என கூறுகின்றனர். அதாவது மாதாந்திர மாத தவணை தொகையை அதிகரிக்கும் பட்சத்தில் அசல் தொகை குறையும். இதன் மூலம் கிரெடிட் ஸ்கோரில் (Credit Score) குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. EMI குறையபோகுது!

ஏதேனும் பெரிய தொகை வரும்போது வங்கி கடனில் ப்ரீ பேமெண்ட் (Pre Payment) செலுத்த நினைப்பதும் சிறந்த முடிவாக தான் இருக்கும். காரணம் இவ்வாறு செய்வதன் மூலம் வங்கி கடனின் பிரின்சிபல் குறையும். அதுமட்டுமன்றி கடனை திருப்பி செலுத்தும் காலமும் அதற்கான வட்டியும் குறையும். ஆனால், இந்த ப்ரீ பேமெண்ட் முறையில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது கடன் பெற்ற நபர்கள் தங்களுக்கு நிதி பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் இந்த ப்ரீ பேமெண்ட் அம்சத்தை தேர்வு செய்யலாம். இல்லையென்றால் தேவையற்ற நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

மாத தவணையை அதிகரிப்பது, ப்ரீ பேமெண்ட் செய்வது இவை இரண்டுமே வீட்டு கடனை அடைக்க உதவும் நிலையில், உங்களது பொருளாதார சூழலுக்கு எது சிறப்பானதாக இருக்கும் என்பதை தேர்வு செய்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது சிறப்பானதாக இருக்கும்.