AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

England Vs Nepal: பார்வையாளர்கள் அரங்கில் குவிந்த குப்பை.. சங்கடத்தை மறந்து நேபாள ரசிகர் செய்த செயல்..! வைரலாகும் வீடியோ!

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் வைரலாகி வரும் வீடியோவில் , நேபாள ரசிகர் ஒருவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் கொண்ட பதாகைகள் கீழே கிடந்ததை சுத்தம் செய்தார். அப்போது, அவர் முகத்தில் புன்னகை நிரம்பியதாக இருந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் இதயங்களை கவர்ந்தது.

England Vs Nepal: பார்வையாளர்கள் அரங்கில் குவிந்த குப்பை.. சங்கடத்தை மறந்து நேபாள ரசிகர் செய்த செயல்..! வைரலாகும் வீடியோ!
நேபாளி ரசிகர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Feb 2026 18:17 PM IST

நேபாளம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (England Vs Nepal) இடையேயான டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) போட்டியின் போது நேபாள ரசிகர் ஒருவர் வான்கடே ஸ்டேடியத்தின் பார்வையாளர்கள் அரங்கை சுத்தம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் போட்டி முடிந்த பிறகு, ட்ராபிக்கில் இருந்து தப்பிக்க வேகவேகமாக வீட்டிற்கு செல்ல முயற்சிப்பார்கள். போட்டி முடிந்த பிறகு, ஸ்டேடியங்களின் பார்வையாளர்கள் அரங்கில் குப்பைகள் நிறைந்ததாக இருக்கும். அதாவது, கிரிக்கெட் ரசிகர்கள் அமரும் இருக்கை உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் நிரம்பி கிடக்கும்.

கடந்த 2025ம் ஆண்டு ஆண்டு பிப்ரவரியில் கனடாவுக்கு எதிரான நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் போட்டியின்போது, நேபாள ரசிகர்கள் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. எனவே, இப்படியான நிகழ்வு நடந்தது இது முதல் முறையல்ல. அப்போது, கீர்த்திபூரில் உள்ள பல்கலைக்கழக ஸ்டேடியத்தை ரசிகர்கள் கையுறைகள் மற்றும் ஃபேஷ்மாஸ்க்களை அணிந்து சுத்தம் செய்திருந்தனர்.

ALSO READ: விரைவில் IND,PAK,BAN இடையே முத்தரப்பு தொடர்.. ஐசிசியை ஓகே சொல்ல வைத்த பிசிபி!

2026 டி20 உலகக் கோப்பையில் வைரலாகும் காட்சிகள்:


டி20 உலகக் கோப்பையில் வைரலாகி வரும் வீடியோவில் , நேபாள ரசிகர் ஒருவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் கொண்ட பதாகைகள் கீழே கிடந்ததை சுத்தம் செய்தார். அப்போது, அவர் முகத்தில் புன்னகை நிரம்பியதாக இருந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் இதயங்களை கவர்ந்தது.

ALSO READ: மத்திய ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்! பின் தங்கிய ரோஹித், விராட்.. ஆதிக்கத்தில் சுப்மன் கில்!

நேபாளம் – இங்கிலாந்து போட்டிகளில் நடந்தது என்ன?

2026 டி20 உலகக் கோப்பையின் 5வது போட்டி கடந்த 2026 பிப்ரவரி 10ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஹாரி புரூக்கின் அரைசதங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 184 ரன்கள் எடுத்தது. நேபாள அணி சார்பாக திபேந்திர சிங் மற்றும் நந்தன் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷேர் மல்லா மற்றும் சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு, நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.

Follow Us