AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: 2 நாட்களில் பல சம்பவங்கள்.. டி20 உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன?

T20 World Cup 2026 Points Table: டி20 உலகக் கோப்பையில் 20 அணிகளில் 6 அணிகள் வெற்றிகளுடன் டி20 உலகக் கோப்பையில் பயணத்தை தொடங்கின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை தங்கள் தொடக்கப் போட்டிகளில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

T20 World Cup 2026: 2 நாட்களில் பல சம்பவங்கள்.. டி20 உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன?
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிImage Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Feb 2026 12:30 PM IST

டி20 உலகக் கோப்பை 2026ன் (2026 T20 World Cup) தொடக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் உற்சாகமாக இருந்தது. போட்டியின் முதல் 2 நாட்கள் பெரிய அளவில் நடந்து முடிந்த நிலையில், பல போட்டிகள் எதிர்பார்ப்பை எகிற செய்தது. கத்துக்குட்டி அணிகள் என்று அழைக்கப்படும் சிறிய அணிகள் கூட, ஐசிசியின் (ICC) நிரந்தர அணிகளுக்கு பயம் காட்டிய சம்பவங்களும் நடந்தது. அதன்படி, ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர் வரை சஸ்பென்ஸாக சென்றது. டி20 உலகக் கோப்பையின் இனி வரும் போட்டிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் அடிப்படையில் புள்ளிகள் அட்டவணையை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விராட் கோலியை ஓய்வுபெற சொல்லி கவுதம் காம்பீர் வற்புறுத்தினரா? பிசிசிஐ செயலர் தகவல்

புள்ளிகள் பட்டியலில் யார் ஆதிக்கம்?

இதுவரை நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு, 20 அணிகளில் 6 அணிகள் வெற்றிகளுடன் டி20 உலகக் கோப்பையில் பயணத்தை தொடங்கின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை தங்கள் தொடக்கப் போட்டிகளில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிடத்தில் உள்ளன. அதே நேரத்தில், இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026 புள்ளிகள் அட்டவணை (குழு வாரியாக)

குழு ஏ

இந்தியா

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட் : +1.450
புள்ளிகள்: 2

பாகிஸ்தான்

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட் : +0.240
புள்ளிகள்: 2

நெதர்லாந்து

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட் : -0.240
புள்ளிகள்: 0

அமெரிக்கா

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட்: -1.450
புள்ளிகள்: 0

நமீபியா

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

குழு B

இலங்கை

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: +1,000
புள்ளிகள்: 2

ஜிம்பாப்வே

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

ஆஸ்திரேலியா

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

ஓமன்

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

அயர்லாந்து

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட்: -1,000
புள்ளிகள்: 0

குழு சி

வெஸ்ட் இண்டீஸ்

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: +1.750
புள்ளிகள்: 2

இங்கிலாந்து

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: +0.200
புள்ளிகள்: 2

இத்தாலி

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

நேபாளம்

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட்: -0.200
புள்ளிகள்: 0

ALSO READ: தொடக்கத்தில் பயம் காட்டிய அமெரிக்கா.. அசால்ட்டாக வென்ற இந்திய அணி..!

ஸ்காட்லாந்து

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட்: -1.750
புள்ளிகள்: 0

குழு டி

நியூசிலாந்து

போட்டிகள்: 1, வெற்றிகள்: 1, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: +1.162
புள்ளிகள்: 2

கனடா

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

தென்னாப்பிரிக்கா

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

போட்டிகள்: 0, வெற்றிகள்: 0, தோல்விகள்: 0
நிகர ரன் ரேட்: 0
புள்ளிகள்: 0

ஆப்கானிஸ்தான்

போட்டிகள்: 1, வெற்றிகள்: 0, தோல்விகள்: 1
நிகர ரன் ரேட்: -1.162
புள்ளிகள்: 0

இன்றைய போட்டிகளைப் பற்றிய ஒரு பார்வை:

போட்டியின் 3வது நாளான இன்று அதாவது 2026 பிப்ரவரி 9ம் தேதி மிக முக்கியமானதாக இருக்கும். இன்று ஸ்காட்லாந்து vs இத்தாலி, ஜிம்பாப்வே vs ஓமன், தென்னாப்பிரிக்கா vs கனடா இடையேயான போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்குப் பிறகு, புள்ளிகள் அட்டவணை மாறலாம்.

Follow Us