AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விராட் கோலியை ஓய்வுபெற சொல்லி கவுதம் காம்பீர் வற்புறுத்தினரா? பிசிசிஐ செயலர் தகவல்

Cricket Controversy Over Virat Kohli: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தான் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற காரணம் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

விராட் கோலியை ஓய்வுபெற சொல்லி கவுதம் காம்பீர் வற்புறுத்தினரா? பிசிசிஐ செயலர் தகவல்
விராட் கோலி - கவுதம் காம்பீர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Feb 2026 21:51 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் (Gautam Gambhir) தான் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற காரணம் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது திடீர் முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது இந்த முடிவுக்குப் பின்னால் அணி நிர்வாகமும் பயிற்சியாளரும் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதே காலகட்டத்தில், இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியது தற்செயலா அல்லது அணி நிர்வாகமும், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் அகியோரின் தூண்டுதலின் பெயரில் அவர்கள் ஓய்வை அறிவித்தனரா என்ற கேள்விகள் எழுந்தது.

இதையும் படிக்க : WI vs SOC: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக்.. ஸ்காட்லாந்தை மிரட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட்!

இந்த விவகாரம் குறித்து இந்தியா டுடேவுக்கு பிசிசிஐயின் செயலர் தேவஜித் சைகியா கவுதம் காம்பீர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார். இதுகுறித்து பேசிய அவர் விராட் கோலி போன்ற வீரரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விராட் கோலி சாதாரண வீரர் அல்ல. அவர் இந்திய கிரிக்கெட்டின் ஒரு ஸ்டார். அவ்வளவு பலம் வாய்ந்த வீரரை யாராலும் முடிவெடுக்க வற்புறுத்த முடியாது. அது அவரது தனிப்பட்ட முடிவு. பிசிசிஐயின் எந்த ஒரு வீரரின் கேரியரிலும் தலையிடாது என்றார்.

மேலும், விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரவும் தகவல்களை சைகியா மறுத்தார். நான் அவர்கள் இருவரும் சண்டைபோடுவதையோ விவாதம் செய்வதையோ ஒருநாளும் பார்த்ததில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர் என்றார்.

இதையும் படிக்க : பைனலுக்கு முன் வந்த மெசேஜ்.. பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. யார் கொடுத்த அட்வைஸ் அது?

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் காம்பீர் இடையே நடந்த மோதல் குறித்து கேட்டபோது, அந்த போட்டியை நான் பார்க்கவில்லை. அவர்கள் இந்தியாவுக்காக விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. என்றார்.

Follow Us