Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்..? ஐசிசி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

Pakistan Cricket Team: பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்குமா என்பது குறித்த விவாதங்கள் இப்போது தொடங்கியுள்ளன. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஏற்கனவே பாகிஸ்தானுக்கு இதுபோன்ற நடவடிக்கையின் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அத்தகைய நடவடிக்கையை எடுத்தால், இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

T20 World Cup 2026: உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்..? ஐசிசி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jan 2026 14:38 PM IST

இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பையில் வங்கதேசம் போட்டியில் இருந்து விலகிய பிறகு, இப்போது அனைவரின் கவனமும் பாகிஸ்தான் மீது  திரும்பியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் போட்டியையே புறக்கணிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனது அணியை அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) அரசாங்கத்திடமிருந்து சிக்னல் வந்த பின்னரே, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த 2026 ஜனவரி 26ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பையும் நக்வி சந்தித்தார். அதன் பிறகு நாளை அதாவது 2026 ஜனவரி 28ம் தேதி அல்லது வருகின்ற 2026 பிப்ரவரி 2ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ALSO READ: இது நடந்தால் உலகக் கோப்பையில் இருந்து விலகுவோம்.. மொஹ்சின் நக்வி அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்குமா..?

பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்குமா என்பது குறித்த விவாதங்கள் இப்போது தொடங்கியுள்ளன. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஏற்கனவே பாகிஸ்தானுக்கு இதுபோன்ற நடவடிக்கையின் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அத்தகைய நடவடிக்கையை எடுத்தால், இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அடியாக அமையும். அதன்படி, 2026 டி20 உலகக் கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் சந்திக்கும் பிரச்சனை குறித்து தெரிந்து கொள்வோம்.

பாகிஸ்தானுக்கு தடை:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அதன் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ், 2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணித்தால், ஐசிசி அதை “அரசியல் தலையீடு” என்று அறிவிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், ஐசிசி பிசிபி மீது பல்வேறு தடைகளை விதிக்கலாம்.

ஐசிசி நிகழ்வுகளை நடத்த தடை:

2028 மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை ஐசிசி, பிசிபிக்கு வழங்கியுள்ளது. இதை ஐ.சி.சி ரத்து செய்யலாம். மேலும், எதிர்காலத்தில் ஐ.சி.சி நிகழ்வுகளை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கப்படாது.

உலகளாவிய கிரிக்கெட்டிலிருந்து தடை:

ஐசிசியால் பிசிபி உலகளாவிய கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்படலாம். இது எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்பதையோ அல்லது எந்த நாட்டுடனும் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதையோ தடுக்கும். தென்னாப்பிரிக்கா 40 தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜிம்பாப்வே மற்றும் இலங்கையும் குறுகிய காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன.

பங்கேற்பு ஒப்பந்தத்தை மீறிய குற்றம்:

ஐசிசி போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து முழு உறுப்பினர் நாடுகளும் ஐ.சி.சி உடன் போட்டி பங்கேற்பு ஒப்பந்தத்தில் (டி.பி.ஏ) கையெழுத்திடுகின்றன. பிசிபி கடைசி நிமிடத்தில் போட்டியில் இருந்து விலகினால், இந்த ஒப்பந்தத்தை மீறியதற்காக ஐ.சி.சி அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும்.

பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வருவாய் பாதிப்பு:

ஒவ்வொரு ஆண்டும், ஐசிசி தனது வருவாயில் ஒரு பங்கை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் வழங்குகிறது. ஐ.சி.சியின் மொத்த வருவாயில் சுமார் 6% பங்கை பாகிஸ்தானும் பெறுகிறது. இது இந்த ஆண்டு சுமார் ரூ.316 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதன் மூலம், பாகிஸ்தான் தயாரிப்பு மற்றும் பங்கேற்பிற்காக ஐ.சி.சி.யிடமிருந்து 5 மில்லியன் டாலர் பெற வேண்டியிருந்தது. எனவே, பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் இது தொகையும் கிடைக்காது. இது தவிர, போட்டியில் பங்கேற்பதன் மூலம், பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.18 கோடி) பரிசுத் தொகை மற்றும் போட்டிகள் தொடர்பான பிற வருவாய்களும் கிடைக்க வேண்டும். இதுவும் தடைப்படும்.

ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!

உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்:

2026 டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தால், அது ஐசிசியின் புறக்கணிப்பையும் எதிர்கொள்ள நேரிடும். இது உலக கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தானை முற்றிலுமாக தனிமைப்படுத்தும். ஐசிசி ஒப்புதல் இல்லாமல், வேறு எந்த நாடும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வராது. இது பாகிஸ்தானுக்கு வருவாய் ஈட்டுவது முற்றிலும் சாத்தியமற்றதாக்கி, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அழிவுக்கு வழிவகுக்கும்.