AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!!

TVK vijay Takes a Decision: விஜய் பிரசார பயண திட்ட விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாட்கள் குறைவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் பிரசாரம் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் பிரசார திட்ட பயணத்தை தவெக அறிவிக்க உள்ளது.

கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?..  விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் டி. நகர் தொகுதியிலும், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விருகம்பாக்கம் தொகுதியிலும் என முதல் கட்ட தலைவர்கள் சென்னையை மையமாக வைத்து களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுயில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு, விஜய் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பெரம்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Mar 2026 07:43 AM IST

சென்னை, மார்ச் 17: சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் விரைவில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலுடன், இறுதி செய்யப்பட்ட தேர்தல் அறிக்கையும் வெளியிட அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் பெருமளவில் உள்ளது.

மேலும் படிக்க: சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான் – நீதிமன்றம் சென்றது சரியில்லை – பவன் கல்யாண் பரபரப்பு கருத்து

234 தொகுதிக்கும் வேட்பாளர் தயார்:

அந்தவகையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக கடந்த மாதம் தொண்டர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் நேர்காணலை விஜய் நடத்தினார். ஆன்லைன் மூலமாகவும் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தற்போது தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர். கூட்டணி அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், அடுத்தகட்ட நகர்வை நோக்கி தவெக பயணிக்கத் தொடங்கியதாக தெரிகிறது. முக்கியமான தொகுதிகளில் தவெகவினர் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர்.

எழும்பூர் தொகுதியில் விஜய் போட்டி?

விஜய் போட்டியிடுவதாக கருதப்படும் சென்னை எழும்பூர் தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்துள்ளார். வில்லிவாக்கம், தியாகராயநகர், வில்லிவாக்கம் பகுதிகளில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் 30-ந்தேதி தொடங்க உள்ளதால், விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த வேட்பாளர் பட்டியலுடன், கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

விரைவில் பிரசார பயண திட்டம்:

அதனை தொடர்ந்து, விஜய் பிரசார பயண திட்ட விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாட்கள் குறைவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் பிரசாரம் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் பிரசார திட்ட பயணத்தை தவெக அறிவிக்க உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஓரிரு நாளில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது.

மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..

நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை:

இந்த கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தை பொதுக்கூட்டங்கள் வாயிலாக முன்னெடுப்பதா? வீதி, வீதியாக பிரசாரம் மேற்கொள்வதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கூட்டணி தொடர்பாகவும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow Us