AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இடி, மின்னலுடன் மழை கொட்டும்.. வெயிலும் கொளுத்தும்.. இன்றைய வானிலை அப்டேட் இதோ..

Weather Forecast: இன்று (மார்ச் 17) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் இயல்பை விட 2 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 18 - 20 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.

இடி, மின்னலுடன் மழை கொட்டும்.. வெயிலும் கொளுத்தும்.. இன்றைய வானிலை அப்டேட் இதோ..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Mar 2026 06:27 AM IST

சென்னை, மார்ச் 17: தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 16) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதேபோல் வடக்கு கடலோர தமிழக பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

மேலும் படிக்க: சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் – விஜய் கோரிக்கை – காரணம் என்ன?

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று 2026 மார்ச் 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மார்ச் 18ம் தேதி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

2026 மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில் மற்ற தமிழக பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பதிவாகலாம். மார்ச் 20ஆம் தேதி கடலோர தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2026 மார்ச் 21ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 22ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்று (மார்ச் 17) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் இயல்பை விட 2 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 18 – 20 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். இது இயல்பை விட 1-2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வாய்ப்பில்லை, எனினும் சற்று குறையக்கூடும். இது இயல்பு நிலையை ஒட்டியே இருக்கும்.

மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து.. பைக் மீது மோதியதில் இருவர் பரிதாப பலி.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us