AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு போலீஸ் தடை – தவெகவினர் கண்டனம் – என்ன நடந்தது?

Whistle Banned at Chepauk Stadium: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு போலீஸ் தடை –  தவெகவினர் கண்டனம் – என்ன நடந்தது?
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விசிலுக்கு தடை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Feb 2026 18:09 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு பிப்ரவரி 8, 2026 அன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வரத்தொடங்கினர். இந்த நிலையில் அப்படி வரும் ரசிகர்களிடம் மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விசில் வைத்திருந்த ரசிகர்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதால் சர்ச்சை

டி20 கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 7, 2026 அன்று நடைபெற்று வரும் நிலையில் இந்தப் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 8, 2026 அன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து பின்னர் நியூசிலாந்து அணி 17.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படிக்க : ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..

இந்த போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மைதானத்தின் நுழைவு வாயிலில் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே வியாபாரிகளிடமும் விசில்களை விற்கக் கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், தவெகவினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளின் போது விசில் அடிப்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் முக்கிய டாக் லைனே விசில் போடு என்பதாக இருந்தது. இந்த நிலையில் தவெக சின்னமாக விசில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என அக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : திரிபுவாதங்களுக்கு இடம் தரக்கூடாது.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்..

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்தே சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சைகள் அடிக்கடி உருவாகும் என்று கூறப்படுகிறது.

Follow Us