AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக உடன் பேச்சவார்த்தை நடத்த 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட முழுமையாக பெற முடியாத சூழலில் உள்ளது. இந்த சூழலில் தொடர் வெற்றி பெற்று வரும் திமுகவுடனான கூட்டணியை தொடர வேண்டும் என்பதோடு, கூடுதலாக கோரும் 10 முதல் 15 சீட்களுக்காக இழக்கை தவறவிடக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.

திமுக உடன் பேச்சவார்த்தை நடத்த 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 14:12 PM IST

மதுரை, பிப்ரவரி 08: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 36 நாட்களாக காத்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் தற்பொழுது சூடுபிடிக்க தொடங்கிவிட்டதால் எப்படியும் பூசல்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 2 கட்சிகளுக்கும் இடையே இடங்களை ஒதுக்குவதில் நிலவும் இழுபறி மற்றும் கருத்து வேறுபாடுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் படிக்க: விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..

20 தொகுதிகள் ஒதுக்க திமுக திட்டம்?

கடந்த முறை திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளை மட்டுமே கையகப்படுத்தியது. இந்த நிலையில், இம்முறை காங்கிரஸ் கோட்டாவை 20 தொகுதிகளுக்குள் நிறுத்துவிட வேண்டும் என திட்டம் வைத்திருந்தது திமுக தலைமை.குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கினால் அது திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் “ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தொண்டனின் உரிமை” என்று பேச ஆரம்பித்தார்கள்.

நீடிக்கும் காங்., – திமுக கூட்டணி குழப்பம்:

சில தலைவர்கள் திமுக கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சொன்னாலும், மற்றவர்கள் கட்சியின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்குள்ளேயே இந்த விவகாரத்தில் கடும் போட்டி மற்றும் கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. இடங்களை குறைத்து வாங்கினால் அது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு இடையே திமுக எம்பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருந்ததுடன், விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ்:

அதேசமயம், காங்கிரஸ் கட்சி அவ்வளவு எளிதாக திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளாது என்பதே அரிசயல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட முழுமையாக பெற முடியாத சூழலில் உள்ளது. இந்த சூழலில் தொடர் வெற்றி பெற்று வரும் திமுகவுடனான கூட்டணியை தொடர வேண்டும் என்பதோடு, திமுக தரப்பும் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக கூறி வருவதால், கூடுதலாக கோரும் 10 முதல் 15 சீட்களுக்காக இழக்கை தவறவிடக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுக உடன் கூட்டணி தொடர்கிறது:

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேசுவதற்கு 36 நாட்களாக காத்திருக்கிறோம். எங்களை பொருத்தமட்டிலும் திமுக உடன் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். இது தான் காங்கிரஸின் கோரிக்கையாக இருக்கிறது என்று கூறினார்.

Follow Us