கடைசி ஓவரில் 4, 6, 6, 4 என அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), இந்திய அணியை 161/9 ரன்களுக்கு உயர்த்தினார். யுஎஸ்ஏ அணிக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. டி20 உலகக்கோப்பை 2026 தொடக்கப் போட்டியில், யுஎஸ்ஏ அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். மும்பையில் உள்ள வான்கடேவில் விளையாடிய இந்த போட்டியில், தொடர் விக்கெட்டுகளை இழந்து இந்திய பேட்டிங் வரிசை சரிந்த நிலையில், தனியாளாக போராடி அரைசதம் அடித்து அணியை கௌரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்த இந்தியா
பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து பவர்பிளே முடிவில் இந்திய அணி 46/4 என தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இக்கட்டான சூழலில், அவசரம் காட்டாமல் நிதானமாக விளையாடி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதையும் படிக்க : T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுடன் போட்டி.. 40 வயதை கடந்த வீரர்கள் பட்டியல்!
சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம்
Leading from the front! 🫡
Captain @surya_14kumar with a crucial 𝗳𝗶𝗳𝘁𝘆 👏
His 2⃣5⃣th in T20Is 👌
Updates ▶️ https://t.co/Rlm2ARPnOV#TeamIndia | #MenInBlue | #T20WorldCup | #INDvUSA pic.twitter.com/NIBrp5EBnc
— BCCI (@BCCI) February 7, 2026
இந்த நிலையில் ஒரு பக்கம் அவர் நிதானமாக ஆடினாலும் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தபடி இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 77/6 என்ற நிலையில் இருந்தது. இருந்த போதும், சூர்யகுமார் யாதவ் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அக்சர் படேலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியை 100 ரன்களை தாண்ட உதவினார். இந்த கூட்டணி, இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்தது.
இதையும் படிக்க : T20 World Cup 2026: தீம் பாடலை வெளியிடும் அனிருத்.. டி20 உலகக் கோப்பையில் தொடக்க விழா விவரம்!
கடைசி ஓவரை நெருங்கிய நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது நிதான ஆட்டத்தை கைவிட்டு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு மாறினார். குறிப்பாக யுஎஸ்ஏ அணியின் பந்துவீச்சாளர் சௌரப் நேத்ரவால்கரை எதிர்த்து, வான்கடே மைதானத்தில் தொடர்ந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசினார். இதனையடுத்து அவர் மொத்தம் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சிறந்த இந்திய இன்னிங்ஸை விளையாடினார். இந்த இன்னிங்ஸின் மூலம், 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக 1,000 ரன்களை கடந்த முக்கிய மைல்கல்லையும் அவர் எட்டினார்.