IND vs USA: எதிர்பார்ப்பை தூண்டும் இந்தியா – அமெரிக்கா போட்டி.. வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி?
Wankhede Stadium Pitch Report: கடந்த 2025ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 247 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதுவே, மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும், இதே ஸ்டேடியத்தில் 240 ரன்கள் எடுத்து இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் இந்திய அணியே பதிவு செய்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையானது (2026 T20 World Cup) இன்று அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி பாகிஸ்தான் vs நெதர்லாந்து போட்டியுடன் தொடங்கியது. இந்தபோட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தற்போது ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியா (Indian Cricket Team) மற்றும் அமெரிக்கா இடையேயான 3வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும், வான்கடேவில் டி20 சர்வதேச போட்டிகளின் சாதனை என்ன உள்ளிட்ட விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: காயத்தால் வெளியேறிய ஹர்சித் ராணா.. முகமது சிராஜூக்கு வாய்ப்பா?
வான்கடேவில் டி20 சர்வதேச சாதனை எப்படி?
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை 9 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இலக்கை துரத்திய அணி 5 முறையும் வென்றுள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி இங்கு இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 4 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.




கடந்த 2025ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 247 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதுவே, மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும், இதே ஸ்டேடியத்தில் 240 ரன்கள் எடுத்து இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் இந்திய அணியே பதிவு செய்துள்ளது. இந்த ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், இங்கு விளையாடிய ஒரே போட்டியில் அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
வான்கடே மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
வான்கடே மைதானம் சிவப்பு களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பிட்சாகும். இங்கு ஆரம்ப கட்டத்தில் வேகபந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் கிடைத்தாலும், பெரும்பாலும் இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே கருதப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் அதிக ஸ்கோர்கள் அடிக்கும் போட்டிகளாகவே அதிகம் இருக்கும். அவுட்ஃபீல்டும் வேகமானது என்பதால், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட்டிங் செய்வது நல்லது. எனவே இன்று டாஸ் வெல்லும் எந்த அணியும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம். தற்போது இருக்கும் இந்திய அணியின் பார்மை கருத்தில் கொண்டு, இந்தியா முதலில் பேட்டிங் செய்தால், இங்கே 300 ரன்கள் கூட அடிக்கலாம்.
இந்திய அணி:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா , அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் மோதும் இந்தியா – அமெரிக்கா.. ஹெட் டூ ஹெட் விவரம்!
அமெரிக்க அணி:
மோனாங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரிஸ் கவுஸ், ஹர்மீத் சிங், ஷெஹான் ஜெயசூர்யா, சைதேஜா எம், ஷயான் ஜஹாங்கீர், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஷுபம் ரஞ்சனே, மிலிந்த் குமார், முகமது மொஹ்சின், ஷாட்லி வான் ஷௌக்விக், அலி கான், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கெனிஜே, சவுரப்