T20 World Cup 2026: காயத்தால் வெளியேறிய ஹர்சித் ராணா.. முகமது சிராஜூக்கு வாய்ப்பா?
Harshit Rana Injury: கடந்த 2026 பிப்ரவரி 4ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியின்போது ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், 2026 பிப்ரவரி 5ம் தேதி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பரிசோதனையில் அவரது முழங்காலில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.
2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா, கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் பந்துவீசும்போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து ஹர்சித் ராணா (Harshit Rana) விலகியுள்ளார். இந்தநிலையில், ஹர்சித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜூக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
நாளை முதல் தொடங்கும் 2026 டி20 உலகக் கோப்பை:
🚨 SIRAJ TIME IN T20 WORLD CUP. 🚨
– Mohammed Siraj has been picked as Harshit Rana’s replacement for the T20 World Cup. (Express Sports). pic.twitter.com/nTyNSHqgJV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 6, 2026
2026 டி20 உலகக் கோப்பை நாளை, 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியின் முதல் நாளில் மொத்தம் 2 போட்டிகள் நடைபெறும். அதன்படி, இந்திய அணி முதல் நாளில் அமெரிக்காவை இரவு 7 மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணி வலுவான அணியை தயார் செய்வது முக்கியம்.




ஹர்சித் ராணாவுக்கு என்ன ஆனது..?
கடந்த 2026 பிப்ரவரி 4ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியின்போது ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், 2026 பிப்ரவரி 5ம் தேதி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பரிசோதனையில் அவரது முழங்காலில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஸ்கேன் மூலம் முழங்காலின் வெளிப்புறப் பகுதியான பக்கவாட்டு மெனிஸ்கஸில் காயம் இருப்பது தெரியவந்தது . பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா, பிசிசிஐ அறிவுறுத்தலின்பேரில் ஹர்சித் ராணாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் குணமடைவது சாத்தியமில்லை என்று மருத்துவக் குழு தெரிவித்து வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா (அவுட்).
முகமது சிராஜ்க்கு வாய்ப்பா?
இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக முகமது சிராஜ் இடம்பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹர்சித் ராணாவுக்குப் பதிலாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் ராணாவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.