AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs USA: டி20 உலகக் கோப்பையில் மோதும் இந்தியா – அமெரிக்கா.. ஹெட் டூ ஹெட் விவரம்!

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்திய அணி ஒரு பெரிய உலக சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெறும். கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றிருந்தது.

IND vs USA: டி20 உலகக் கோப்பையில் மோதும் இந்தியா – அமெரிக்கா.. ஹெட் டூ ஹெட் விவரம்!
சூர்யகுமார் யாதவ் - மோனாக் படேல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Feb 2026 11:35 AM IST

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இன்று அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் நாளில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்த்து தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2024 டி20 உலகக் கோப்பை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. அதன் பிறகு, இந்த ஆண்டும் அதே வெற்றிக் கொடியை ஏற்றி இந்தப் போட்டியை வலுவாகத் தொடங்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுடன் போட்டி.. 40 வயதை கடந்த வீரர்கள் பட்டியல்!

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்திய கிரிக்கெட் அணியும், அமெரிக்க கிரிக்கெட் அணியும் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளன. இது 2024 டி20 உலகக் கோப்பையின் போது நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா எளிதாக வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. எனவே, 2026 பிப்ரவரி 7ம் தேதியான இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியே முன்னிலை வகிக்கும் என்று தெரிகிறது.

உலக சாதனை படைக்குமா இந்தியா..?

2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்திய அணி ஒரு பெரிய உலக சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெறும். கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றிருந்தது. எனவே இன்று தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவிற்கு எதிராக வெற்றி பெற்றால், தொடர்ச்சியான 9வது வெற்றியாக அமையும். இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைக்கும். தற்போது, ​​தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த 3 அணிகளும் இதுவரை தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

ALSO READ: தீம் பாடலை வெளியிடும் அனிருத்.. டி20 உலகக் கோப்பையில் தொடக்க விழா விவரம்!

இரு அணிகளின் அணிகளின் விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, அக்ஷர் படேல் (துணை கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.

அமெரிக்கா அணி:

மோனாக் படேல் (கேப்டன்), ஜெஸ்ஸி சிங், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஷெஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயான் ஜஹாங்கீர், சைதேஜா முக்காமலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நோஸ்டுஷ் கென்ஜிகே, ஷைட்லி வான் ஷால்க்விக், சவுரப் நேத்ரவால்கர், மொஹம்மத், அலி கான்

 

Follow Us