AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: விரைவில் IND,PAK,BAN இடையே முத்தரப்பு தொடர்.. ஐசிசியை ஓகே சொல்ல வைத்த பிசிபி!

Pakistan Cricket Board: இந்தியாவை உள்ளடக்கிய இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களுக்கு ஐ.சி.சி உத்தரவாதம் அளிக்க முடியாது. இந்த அதிகாரம் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) உள்ளது. இதற்கிடையில், இந்தியாவும் வங்கதேசமும் வருகின்ற 2026 செப்டம்பரில் ஒரு தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

T20 World Cup 2026: விரைவில் IND,PAK,BAN இடையே முத்தரப்பு தொடர்.. ஐசிசியை ஓகே சொல்ல வைத்த பிசிபி!
பாகிஸ்தான் - வங்கதேசம் - இந்தியாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Feb 2026 19:30 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா-பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டி நடைபெறமா இல்லையா என்பது குறித்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் இடையிலான சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி, வங்கதேச கிரிக்கெட் அணிக்கு நிதி இழப்பீடு வழங்குதல் குறித்து பல முக்கிய விவாதங்கள் நடந்தது. இந்த விஷயம் இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை எட்டி, இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான முத்தரப்பு தொடர் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

லாகூரில் நேற்று அதாவது 2026 பிப்ரவரி 9ம் தேதி ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டது. இது தொடர்பாக, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்து, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கலாம். இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், பாகிஸ்தானும் வங்கதேசமும் ஐசிசி முன் ஒரு குறிப்பிடத்தக்க கோரிக்கையை வைத்துள்ளன.

ALSO READ: நிதி இழப்பா? பேச்சுவார்த்தையில் இறங்கிய ஐசிசி.. முடிவை மாற்றுமா பாகிஸ்தான்?

முத்தரப்பு தொடரை கேட்கும் பாகிஸ்தானும் வங்கதேசமும்..

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 2024ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஹைபிரிட் மாடலின் ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான முத்தரப்பு தொடர் போட்டிக்கு ஐ.சி.சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த போட்டிக்கு ஈடாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, வங்கதேசத்திற்கு இந்தியாவுடன் இருதரப்பு தொடர்களை மீண்டும் தொடங்க விரும்புகிறது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே முத்தரப்பு தொடரை கோரியுள்ளன.

இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், இந்தியாவை உள்ளடக்கிய இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களுக்கு ஐ.சி.சி உத்தரவாதம் அளிக்க முடியாது. இந்த அதிகாரம் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) உள்ளது. இதற்கிடையில், இந்தியாவும் வங்கதேசமும் வருகின்ற 2026 செப்டம்பரில் ஒரு தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தொடர் தற்போது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ: தொடரும் இந்தியா – பாகிஸ்தான் சர்ச்சை! வங்கதேசத்திற்கு இழப்பீடு கேட்டும் பிசிபி.. ஐசிசி முடிவு என்ன?

கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையில், வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற குரூப் போட்டியில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்ததால், போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் உடன் ஒற்றுமையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் ஐசிசியால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

Follow Us