AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: தொடரும் இந்தியா – பாகிஸ்தான் சர்ச்சை! வங்கதேசத்திற்கு இழப்பீடு கேட்டும் பிசிபி.. ஐசிசி முடிவு என்ன?

India vs Pakistan: ஐபிஎல் 2026 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்தநேரத்தில், வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டத்தை தொடர்ந்து, முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு எதிராகவும், கொல்கத்தா அணிக்கு எதிராகவும் இந்தியாவில் குரல்கள் எழுந்தன.

T20 World Cup 2026: தொடரும் இந்தியா – பாகிஸ்தான் சர்ச்சை! வங்கதேசத்திற்கு இழப்பீடு கேட்டும் பிசிபி.. ஐசிசி முடிவு என்ன?
இந்தியா - பாகிஸ்தான் போட்டிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Feb 2026 17:47 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. இது தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 4 மணிநேர கூட்டத்திற்கு பிறகு எந்த கூட்டு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள டானின் வட்டாரங்களின்படி, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னரே இரு தரப்பினரும் ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் என்று தெரிவித்திருந்தது.

ALSO READ: சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களிடம் விசில்கள் பறிமுதல்…கடைகளிலும் விசில் விற்பனைக்கு நோ..பிசிசிஐ விளக்கம்!

பாகிஸ்தானில் நடந்தது என்ன..?

இதுதொடர்பாக டான் வெளியிட்ட செய்தியில், “ஐசிசிக்கு வரும் வருவாயில், 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது” என கூறியிருந்தார். இந்தநிலையில், பிசிபியின் கோரிக்கையை ஏற்று ஐசிசி இழப்பீடு தர சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நடந்த போராடும் இம்ரான் கவாஜா:

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்துவதற்கு ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா கிட்டத்தட்ட முழுப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் போன்ற முக்கிய கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் அசோசியேட் நாடுகளின் நம்பிக்கையை இம்ரான் பெற்றுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், “ஐசிசி நடுவர் குழுவின் முன் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிப்பதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். ஏனெனில், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல” என்று தெரிவித்தார்.

யார் இந்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா..?

இம்ரான் கவாஜா 2017 முதல் ஐ.சி.சி.யின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 2020 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.சி.சி தலைவர் ஷஷாங்க் மனோகர் ராஜினாமா செய்தபோது அவர் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றினார். எனவே, இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தீர்ப்பதில் இம்ரான் கவாஜா ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.

ALSO READ: நிதி இழப்பா? பேச்சுவார்த்தையில் இறங்கிய ஐசிசி.. முடிவை மாற்றுமா பாகிஸ்தான்?

என்னதான் பிரச்சனை?

ஐபிஎல் 2026 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்தநேரத்தில், வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டத்தை தொடர்ந்து, முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு எதிராகவும், கொல்கத்தா அணிக்கு எதிராகவும் இந்தியாவில் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, பிசிசிஐ முஸ்தாபிசுர் ரஹ்மானை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2026 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடியது. ஏனெனில், அவர்களின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவிற்கு வெளியே விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி ஏற்கவில்லை. இதன் காரணமாக, வங்கதேசம் 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

Follow Us