AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொதப்பிய பேட்டிங் ஆர்டர்…. கௌதம் காம்பீர் கொடுத்த அட்வைஸ் – சூர்யகுமார் யாதவ் பகிர்ந்த சீக்ரெட்

டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில், யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், நாங்கள் இன்னும் புத்திசாலித்தனமாகவும், சிறப்பாகவும் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்றார்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Feb 2026 13:58 PM IST
யுஎஸ்ஏவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார்.  அந்த தருணத்தில் தனக்கு மிகுந்த அழுத்தம் இருந்தது.  நான் இறுதி வரை பேட் செய்தால் மாற்றம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்றார்.

1 / 5
மேலும் பேசிய அவர்  சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் பிட்சில் ஈரப்பதம் இருந்தது. இது 180 – 190 ரன்கள் அடிக்க கூடிய பிட்ச் அல்ல. 140 ரன்கள் பிட்ச் போல தான் இருந்தது என்று விளக்கம் அளித்தார்.

2 / 5
அந்த நேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கொடுத்த முக்கியமான அறிவுரையும் சூர்யகுமாருக்கு உற்சாகம் அளித்ததாக தெரிவித்தார்.  இதுகுறித்து பேசிய அவர், 14 ஓவர்களுக்கு பிறகு இறுதி வரை பேட் செய். எப்போது வேண்டுமானாலும் ஸ்கோரை அதிகரிக்கலாம் என்று அவர் சொன்னார் என சூர்யகுமார் கூறினார்.

3 / 5
வாங்கடே மைதானத்தில் அதிக கிரிக்கெட் விளையாடிய அனுபவம் தனக்கு உதவியதாகவும், ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை நிற்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு விளையாடினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

4 / 5
மற்றொரு பக்கம், யுஎஸ்ஏ அணியின் கேப்டன் மோனாங்க் படேல், 130 ரன்கள் இலக்காக இருந்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் கேட்ச்கள் தவறியது மற்றும் தொடக்க வீரர்கள் சொதப்பியது தோல்விக்குக் காரணம்” என்று கூறினார்.

5 / 5
Follow Us