AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BCCI: மத்திய ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்! பின் தங்கிய ரோஹித், விராட்.. ஆதிக்கத்தில் சுப்மன் கில்!

BCCI Central Contracts 2026: புதிய மத்திய ஒப்பந்தங்களின்படி, சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கிரேடு ஏ-வில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக உள்ளார். இதன் காரணமாக கிரேட் ஏ பெற்றுத் தந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணியின் மிகவும் நம்பகமான வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால், கிரேடு ஏவில் உள்ளது.

BCCI: மத்திய ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்! பின் தங்கிய ரோஹித், விராட்.. ஆதிக்கத்தில் சுப்மன் கில்!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Feb 2026 11:28 AM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025-26 சீசனுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. இந்த 2026ம் ஆண்டு மத்திய பட்டியல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில், இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கடந்த சீசன் வரை முதல் A+ பிரிவில் இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த முறை கீழ் C பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இரு வீரர்களும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகின்றன. ஏற்கனவே, இவர்கள் இருவரும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டனர்.

கிரேடு A-ல் இடம் பெற்ற வீரர்கள்:

புதிய மத்திய ஒப்பந்தங்களின்படி, சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கிரேடு ஏ-வில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக உள்ளார். இதன் காரணமாக கிரேட் ஏ பெற்றுத் தந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணியின் மிகவும் நம்பகமான வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால், கிரேடு ஏவில் உள்ளது. ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது குறிப்பிடத்தக்க பங்கைக் கருத்தில் கொண்டு, கிரேடு ஏவில் உள்ளார். அதேபோல், இந்தியாவின் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ் கிரேடு ஏ-வில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: விரைவில் IND,PAK,BAN இடையே முத்தரப்பு தொடர்.. ஐசிசியை ஓகே சொல்ல வைத்த பிசிபி!

கிரேடு A+ முறை:

இந்த 2026ம் ஆண்டு பிசிசிஐ தனது மத்திய ஒப்பந்த முறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு வரை மிக உயர்ந்த பிரிவாகக் கருதப்பட்ட கிரேடு A+ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கிரேடு A இப்போது டாப்-டையர் பிரிவாக மாறியுள்ளது. 2025-26 சீசனுக்கான இந்த டாப் கிரேடு மூன்று வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்

கிரேடு-ஏ:

சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா , ரவீந்திர ஜடேஜா

கிரேடு-பி:

விராட் கோலி , ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர்.

கிரேடு-சி:

திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, துருவ் ஜுரைல், அபிஷேக் சர்மா, ரவி பிஷ்னோய், சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட்.

ALSO READ: முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி உறுதி.. முழு விவரம்!

பெண்கள் அணியில் யாருக்கு இடம் கிடைத்தது?

கிரேடு-ஏ:

ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா.

கிரேடு-பி:

ரேணுகா தாக்கூர், ஷெபாலி வர்மா, ரிச்சா கோஷ், சினே ராணா.

கிரேடு-சி:

ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், பிரதிகா ராவல், கிராந்தி கவுர், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரணி, ஹர்லீன் தியோல், ஜி கமாலினி, வைஷ்ணவி சர்மா, தேஜல், யாஸ்திகா பாட்டியா, காஷ்வி கவுதம், உமா சேத்ரி

Follow Us