Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Cricket Team: குடும்பத்துடன் தங்க அனுமதி கேட்ட இந்திய வீரர்கள்.. ஸ்ரிட்டாக நோ சொன்ன பிசிசிஐ!

2026 T20 World Cup: கடந்த 2025ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிசிசிஐ ஒரு நீண்ட வழிகாட்டுதல் பட்டியலை வெளியிட்டது. கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, சுற்றுப்பயணம் முழுவதும் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அவர்களுடன் தங்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சில வீரர்கள் இதை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

Indian Cricket Team: குடும்பத்துடன் தங்க அனுமதி கேட்ட இந்திய வீரர்கள்.. ஸ்ரிட்டாக நோ சொன்ன பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Feb 2026 19:35 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின்போது இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்க அனுமதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிராகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் (BGT) இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் போட்டிகளுக்கான குடும்பப் பயணம் குறித்து பிசிசிஐ பல விதிமுறைகளை விதித்தது. இது தற்போது, 2026 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்கிறது. அதன்படி, இந்திய வீரர்கள் (Indian Cricket Team) தங்கள் மனைவிகள், காதலிகள் அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினர்களுடனும் டி20 உலகக் கோப்பையின் போது செல்ல அனுமதிக்க பிசிசிஐ மறுத்தது.

ALSO READ: முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி உறுதி.. முழு விவரம்!

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தியின்படி, இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் குடும்பங்களைச் சேர்க்க பிசிசிஐயிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் பிசிசிஐ அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 45 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணங்களில் வீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் அதிகபட்சம் 14 நாட்கள் தங்க பிசிசிஐ அனுமதிக்கிறது. இருப்பினும், டி20 உலகக் கோப்பை இந்திய மண்ணில் நடைபெறுவதால் பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

அனுமதி கேட்ட வீரர்கள் யார்..?

கிடைத்த தகவலின்படி, இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட ஒரு சில அனுபவ வீரர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் காதலியை அணியுடன் பயணம் செய்து தங்க முடியுமா என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டதாகவும், வீரர்களுடன் குடும்பங்கள் தங்க அனுமதிக்கப்படாது என்று வாரியம் தெரிவித்தது. இருப்பினும், இந்திய வீரர்கள் விரும்பினால் தனித்தனி ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் போட்டி அட்டவணை:

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3 குரூப் ஸ்டேஜ் போட்டிகளை சொந்த மண்ணிலும், ஒரு போட்டி கொழும்பில் விளையாடும். முந்தைய இருதரப்பு தொடர்களில், வீரர்களின் குடும்பங்கள் அணியுடன் தங்க அனுமதிக்கப்படவில்லை. 2026 டி20 உலகக் கோப்பைக்கும் பிசிசிஐ இந்தக் கொள்கையை பின்பற்றி வருகிறது.

ALSO READ: பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

கடந்த 2025ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிசிசிஐ ஒரு நீண்ட வழிகாட்டுதல் பட்டியலை வெளியிட்டது. கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, சுற்றுப்பயணம் முழுவதும் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அவர்களுடன் தங்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சில வீரர்கள் இதை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். தங்கள் மனைவிகள் இருப்பதால் சில வீரர்கள் சரியாக கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, இந்திய அணி உறுப்பினர்கள் பிசிசிஐயிடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்தனர். இதன் விளைவாக, பிசிசிஐ பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.