Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silver Price : தீபாவளிக்கு பிறகு விலை குறையும் வெள்ளி?.. வெளியான முக்கிய தகவல்!

Silver Price Expected to Decrease | 2025 ஆம் ஆண்டு வெள்ளிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் இந்த ஆண்டு வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெள்ளி விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Silver Price : தீபாவளிக்கு பிறகு விலை குறையும் வெள்ளி?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Oct 2025 12:05 PM IST

2025 ஆம் ஆண்டு தங்கத்தை (Gold) விட வெள்ளிக்கு (Silver) சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், இந்த ஆண்டு வெள்ளி விலை (Silver Price) மிக கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டு ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.1,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே ஆண்டில் ரூ.80,000 வரை வெள்ளி விலை உயர்வை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளி ரூ.2 லட்சத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.2 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. இவ்வாறு கடந்த சில நாட்களாக வெள்ளி நிலையற்ற தன்மையை கொண்டிருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெள்ளி விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி விலை

2024 ஆம் ஆண்டு வெள்ளி விலை கனிசமான உயர்வையே அடைந்தது. ஆனால், 2025 ஆம் ஆண்டு அப்படி இல்லை. இந்த ஆண்டு தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. அதாவது ஒரே ஆண்டில் வெள்ளி 98 சதவீதம் விலை உயர்வை அடைந்துள்ளது. வெள்ளி இத்தகைய அசாத்தியமான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், 1980 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடந்ததை போல வெள்ளி விலை கடுமையான சரிந்ததை போல ஏதேனும் தாக்கம் ஏற்படுமோ என்கிற சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது

கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது வெள்ளியில் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. காரணம் மின்சாதன பொருட்கள், மின்சார வாகனங்கள் என பலவற்றுக்கு வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளியின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருவதற்கு காரணம் பொதுமக்கள் வெள்ளி பொருட்கள், கட்டிகளை வாங்குவது மட்டுமல்ல. தொழிற்சாலை தேவைகள் அதிகரித்துள்ளது தான் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு சோலார் தயாரிப்புக்கு மட்டும் 200 மில்லியன்ஸ் அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது. 2030 ஆம் ஆண்டில் இது 450 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. விலை உயர இதுதான் காரணமா?

வெள்ளி விலை குறையுமா?

மின்சார வாகனங்களின் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் வெள்ளி விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை 2028 ஆம் ஆண்டு வெள்ளியை மையப்படுத்தி புதிய திட்டங்கள் நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தீபாவளிக்கு பிறகு வெள்ளி பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.