Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. விலை உயர இதுதான் காரணமா?

Gold Price Hike: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 17, 2025-ஆம் தேதியான இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.12,200க்கும் ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. விலை உயர இதுதான் காரணமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Oct 2025 11:04 AM IST

தங்கம் விலை, அக்டோபர் 17, 2025: தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. விலையை பார்த்தாலே தலைசுற்றும் அளவிற்கு அதிகரித்து உள்ளது. தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்குகிறது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் அக்டோபர் 17, 2025-ஆம் தேதியான இன்று ரூ.300 அதிகரித்து ரூ.12,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் 16, 2025-ஆம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,900க்கு விற்பனையாக இருந்தது. ஒரே நாளில் ரூ.300 உயர்ந்துள்ளது, இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் என வல்லுநர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். அந்த வகையில், நாளுக்கு நாள் தங்கம் விலை ஆயிரம் கணக்கில் உயர்ந்து வருகிறது. நம் கலாச்சாரத்தின் படி எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்கத்திற்கு தனி இடம் உண்டு. தங்கம் விலை ஒரு பக்கம் உயர்ந்தாலும், நகை வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க: மலபார் கோல்ட் தூதராக பாகிஸ்தான் பிரபலம்.. கிளம்பிய சர்ச்சை!

தங்கம் விலை உயர என்ன காரணம்?

அரசாங்கக் கடன் அளவுகள் அதிகரித்து வருவதாலும், தற்போதைய அமெரிக்க அரசாங்க முடக்கம் காரணமாக உருவாகியிருக்கும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் சுதந்திரம் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன. அரசியல் தலையீடு அமெரிக்க வட்டி விகிதங்களை குறைத்தால், அது பணவீக்கத்தில் மீண்டும் எழுச்சியை காணக்கூடும். பாரம்பரியமாக தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக கருதப்படுகிறது. ஆனால் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வுக்கு இந்த காரணிகளே முக்கியமானவை என பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. EMI குறையபோகுது!

தங்கம் பரிமாற்ற வர்த்தக நிதிகளில் இருந்து இந்த விலை உயர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிதிகள் தங்கத்தின் நகர்வுகள் அல்லது பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற சொத்துக்களை கண்காணிக்கின்றன. மேலும் அவை பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது பொருட்கள் போன்ற சொத்துக்கள் முதலீட்டாளர்கள் மிகவும் அணுகக்கூடியதாக ஆகிறது.

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை:

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 17, 2025-ஆம் தேதியான இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.12,200க்கும் ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், 24-கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,039க்கும் ஒரு சவரன் ரூ.1,06,472க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300வும் சவரனுக்கு ரூ.2,400வும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதம் தங்கம் விலை (ஒரு சவரன் – ஆபரண தங்கம்):

  • அக்டோபர் 17, 2025 → ₹97,600
  • அக்டோபர் 16, 2025 → ₹95,200
  • அக்டோபர் 15, 2025 → ₹94,880
  • அக்டோபர் 14, 2025 → ₹94,600
  • அக்டோபர் 13, 2025 → ₹92,640
  • அக்டோபர் 11, 2025 → ₹92,000
  • அக்டோபர் 10, 2025 → ₹90,720

தங்கம் ஒரு பக்கம் இருந்தாலும், வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்தே வந்தது. ஆனால் இன்று, வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி ரூ.23க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.