மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ரூ.95,000 கடந்து விற்பனை..
Gold Price: ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,981 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,03,848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை, அக்டோபர் 16, 2025: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தீபாவளி பண்டிகை வருவதற்கு முன்னதாக ஒரு சவரன் நகை ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனையாகும் என ஏற்கனவே வல்லுநர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நகை ஆபரண தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அக்டோபர் 16, 2025 என்ற இன்று, ஒரு சவரன் நகை 95 ஆயிரத்தை கடந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எதிர்பார்க்காத அளவிற்கு கடுமையான உயர்வை எட்டியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 3,200 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தங்கம் விலை உயர காரணம்:
உலக வங்கியில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. இதன் காரணமாக தங்க சந்தையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்ந்தாலும், நமது கலாச்சாரத்தின் படி எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தங்கத்திற்கு ஒரு தனி இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். ஒரு புறம் தங்கம் விலை உயர்ந்தாலும், மக்களிடம் தங்கத்திற்கான விருப்பம் இன்றளவும் குறையாமல் இருந்து வருகிறது.
மேலும் படிக்க: நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்..
95,000 ரூபாய் கடந்து விற்பனையாகும் தங்கம்:
அக்டோபர் 16, 2025 (இன்று), ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,981 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,03,848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் ரூ.95,200 க்கு விற்பனையாகிறது. அக்டோபர் 15, 2025 என்ற நேற்று, ஆபரண தங்கம் ஒரு சவரன் 94,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 1,03,054 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
தங்கம் விலை மட்டுமல்ல, வெள்ளி விலையும் கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால் அக்டோபர் 16, 2025 தேதியான இன்று வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி 26 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,06,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் 15, 2025 என்ற நேற்று, வெள்ளி ஒரு கிராமிற்கு 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும் நிலையில், தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.