Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

Gold Price Cut and Silver Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Feb 2026 10:46 AM IST

சென்னை, பிப்ரவரி 10 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) மிக கடுமையான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 10, 2026) தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீரான மாற்றங்களை கண்டு வரும் தங்கம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயருவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. பங்குச்சந்தை, தேவை, புவிசார் பதற்றம் ஆகியவை தங்கம் மற்றும்  வெள்ளி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். 2026, ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுலா அதிபரை அமெரிக்கா நாடு கடத்தியது, ஈரான் உடன் மோதல் போக்கை கடைபிடித்தது ஆகியவை புவிசார் பதற்றத்தை அதிகரித்து தங்கம் மற்றும் வெள்ளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.

இதையும் படிங்க : பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்

இவ்வாறு தங்கம் விலை மிக கடுமையான உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெரிய அளவு மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026, ஜனவரியில் கடுமையான விலை உயர்வை சந்தித்த தங்கம் மற்றும் வெள்ளி பிப்ரவரியில் சீரான விலை ஏற்ற, இறக்கங்களை கொண்டுள்ளது.

ரூ.15,000-க்குள் விற்பனை செய்யப்படும் தங்கம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
01 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
02 பிப்ரவரி 2026 ரூ.13,950 ரூ.1,11,600
03 பிப்ரவரி 2026 ரூ.14,270 ரூ.1,14,160
04 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
05 பிப்ரவரி 2026 ரூ.14,320 ரூ.1,14,560
06 பிப்ரவரி 2026 ரூ.14,250 ரூ.1,14,000
07 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
08 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
09 பிப்ரவரி 2026 ரூ.14.650 ரூ.1,17,200
10 பிப்ரவரி 2026 ரூ.14,580 ரூ.1,16,640

இதையும் படிங்க : இந்த 5 நாடுகளில் மிக குறைவான விலையில் தங்கம் வாங்கலாம்.. பட்டியல் இதோ!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்று (பிப்ரவரி 10, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,580-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.