AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்” திருப்பூர் ஜவுளி வணிகம் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!

Tiruppur Textile Business : இந்தியா - அமெரிக்கா இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் காரணமாக திருப்பூர் ஜவுளி வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்கும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே. எம். சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

“இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்” திருப்பூர் ஜவுளி வணிகம் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!
வர்த்தக ஒப்பந்தத்தால் திருப்பூர் ஜவுளி வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியடையும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Feb 2026 11:05 AM IST

தமிழ்நாட்டில் ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் மாவட்டம் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இங்கிருந்து, தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஜவுளி பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியா– அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வரும் 3 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதி ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், தற்போது திருப்பூர் ஜவுளிகளுக்கு தேவை மேலும் அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி அதே காலக் கட்டத்தில் ஜவுளி துறையில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாகும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் திருப்பூரில் ஜவுளி வணிகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சியை வழங்கும் என்பதால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார்.

அமெரிக்காவில் இருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்கும்

இதேபோல, ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரும், ஸ்டார்லைட் ஏற்றுமதியாளர்களின் நிறுவனமான எம். ரத்தினசாமி  கூறுகையில், இந்திய ஜவுளிகள் மீதான குறைந்த வரிகள் காரணமாக வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிடம் இருந்து அதிக ஆர்டர்களை பெறுவார்கள். இதற்கு முன்பு, குறைந்த வரிகள் காரணமாக பல்வேறு அமெரிக்காவின் ஆர்டர்கள் வங்கதேசத்துக்கு சென்றன. ஆனால், வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்தியாவின் வரிகள் அண்டை நாடுகளை விட குறைவாக உள்ளன. வரும் நாட்களில் அமெரிக்காவில் இருந்து அதிக ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

மேலும் படிக்க: சென்னையில் ரூ.70.37 கோடியில் புதிய நடைபாதைகள்…6 மண்டலங்களில் அமைக்கப்படுகிறது..எங்கெல்லாம் தெரியுமா!

அமெரிக்க வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைவு

இந்தியாவும், அமெரிக்காவும் நேற்று திங்கள்கிழமை மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியா மீதான பரஸ்பர வரிகளை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மிகச்சிறந்த நண்பரான பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அவரது வேண்டுகோளின் அடிப்படையில், உடனடியாக அமலுக்கு வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

113 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பட்டு, ஆயத்த ஆடைகள், கம்பளங்கள், கைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் மற்றும் பருத்தி ஜவுளிகள் ஆகியவை அமெரிக்கா வரிகளுக்கு உட்பட்டு உள்ளது. இதனால், பற்று மீதான இறக்குமதி வரி பூஜ்ஜிய சதவீதமாக குறைக்கப்பட்டு இந்தியாவின் பட்டு ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவில் 113 பில்லியன் சந்தையை அணுக வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!

Follow Us