“எனக்கு சவக்குழி தோண்ட முடியாது”.. பிரதமரின் பரபரப்பு பேச்சு.. மாநிலங்களவையில் கடும் அமளி..
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் ஆகியவை மத்தியிலும், மாநிலங்களவையிலும் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளன. இன்று நாம் ‘ஒப்பந்தம்’ பற்றி பெருமையாக பேசுகிறோம். முன்பெல்லாம் ஒப்பந்தம் என்று சொன்னால், அது போபர்ஸ் பேரம் பற்றியதாக இருந்தது. அவர்கள் தங்கள் பாக்கெட்டை மட்டுமை நிரப்பிக் கொண்டனர்.
டெல்லி, பிப்ரவரி 06: நாடாளுமன்ற மாநிலங்களவை குடியரசுத் தலைவர் உரைக்கு நேற்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று மாலை பதில் அளித்தார். அவர் தனது பதிலை தொடங்கியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்க வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கிண்டலடிக்கும் விதமாக, “கார்கே இருக்கையில் அமர்ந்தபடியே முழக்கமிடலாம்” என்று பிரதமர் கூறினார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!
9 வர்த்தக ஓப்பந்தங்கள்:
பிரதமர் மோடி தனது பதிலுரையில் பேசியதாவது, இரண்டாவது உலகப்போருக்கு பிறகு புதிய உலக விரிசை உருவானது. கொரோனாவுக்கு பிறகு புதிய உலக விரிசையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் ஆய்வு செய்தால், அது இந்தியாவை நோக்கி நகர்வது தெரியும். உலகம் இப்போது தெற்குலகத்தை பற்றி பேசுகிறது. தெற்குலகின் உரத்த குரல் இந்தியா. வருங்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களில் 9 புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ளோம்.
அவற்றுக்கெல்லாம் தாய் போன்றது தான் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் செய்து கொண்டவுடன் உலத்திற்கு ஸ்திரத்தன்மை குறித்த நம்பிக்கை வந்தது. அமெரிக்காவுடன் வாக்கு ஒப்பந்தத்திற்கு பிறகு உலக அளவில் மின்னல் வேகம் பெறுகிறது. அதை நாம் மேம்படுத்த உள்ளோம். இந்தியாவில், இளைஞர்களுக்கு அந்த ஒப்பந்தம் பலன் அளிக்கும். இனிமேல் இந்தியா திரும்பிப் பார்க்கவே, நிற்கவே வேண்டியது இல்லை.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இந்தியா தற்போது சுயநிறைவு என்பதில் பயணிக்கிறது. எந்த நாடும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வராத அளவுக்கு நாட்டை கொண்ட வந்தது பற்றி எதிர்க்கட்சிகள் என்றாவது ஒரு நாள் பதிலளிக்க வேண்டும்.
முன்பெல்லாம் ஒப்பந்தம் என்றால் போபர்ஸ் பேரமே:
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் ஆகியவை மத்தியிலும், மாநிலங்களவையிலும் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளன. இன்று நாம் ‘ஒப்பந்தம்’ பற்றி பெருமையாக பேசுகிறோம். முன்பெல்லாம் ஒப்பந்தம் என்று சொன்னால், அது போபர்ஸ் பேரம் பற்றியதாக இருந்தது. அவர்கள் தங்கள் பாக்கெட்டை மட்டுமை நிரப்பிக் கொண்டனர்.
அன்பின் கடை பற்றி பேசியவர்கள், தற்போது “மோடி உங்களுக்கு சவக்குழி தோண்டப்படும்” என்று முழக்கம் எழுப்புகிறார்கள். தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்துள்ளது. எனவே, எங்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறது.
மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
ஆனால் நான் யாருக்காக பாடுபடுகிறேனோ, அந்த கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழைகள் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி தான் சவக்குழி தோண்ட முடியாது. காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களை “பிரச்சினைகளாக” பார்த்தது. ஆனால் நாம் அவர்களை நமது பலமாகவும், சவால்களுக்கு தீர்வாகவும் பார்க்கிறோம் என்றார்.