ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்.. அலறி அடித்துக்கொண்டு சாலை ஓரத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!
6.3 Magnitude Earthquake Strikes Afghanistan | ஆப்கானிஸ்தானில் இன்று (நவம்பர் 03, 2025) அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டடங்கள் குலுங்க தொடங்கிய நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
காபுல், நவம்பர் 03 : ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இன்று (நவம்பர் 03, 2025) அதிகாலை திடீர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று கடுமையாக இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், இந்த கடுமையான நிலநடுக்கத்தை அந்த பகுதி சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்படுள்ள கடுமையான நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (நவம்பர் 03, 2025) அதிகாலை திடீர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஹெரிப் நகரை மையமாக கொண்டு சுமார் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில்நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நில்நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) கூறியுள்ளது.




இதையும் படிங்க : Melissa Cyclone: ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய மெலிஸா புயல்!
6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்
EQ of M: 6.3, On: 03/11/2025 01:59:02 IST, Lat: 36.51 N, Long: 67.50 E, Depth: 23 Km, Location: Afghanistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/3aODD7jOky— National Center for Seismology (@NCS_Earthquake) November 2, 2025
6.3 ரிக்டர் அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்க தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு அதிகாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : வீட்டை சுத்தம் செய்யாததால் வந்த சண்டை.. கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!
சாலைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
🚨
In Khulm District of Samangan Province, Afghanistan – the epicenter of tonight’s #earthquake and a neighboring province of Balkh – mountains have collapsed, causing casualties among the local population. pic.twitter.com/QDAvKqqSyQ— Jamililer (@JamilKhabir396) November 2, 2025
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 2,200 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அங்கு மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.