பூமிக்கு அருகில் சுற்றி வரும் புதிய நிலா.. வானில் ஓர் அதிசயம்!!
quasi-moon Arjuna 2025 PN7: ‘குவாசி மூன்’ (quasi-moon) எனப்படும் புதிய நிலவு ஒன்று பூமியின் அருகில் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக இந்த நிலவு பூமியுடன் சுற்றி வந்தாலும், தற்போது தான் விஞ்ஞானிகளால் இதனை கண்டறிய முடிந்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் விண்வெளி ஆராய்ச்சியில் புதுப்புது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ‘குவாசி மூன்’ (quasi-moon). இது பூமியின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிலவு என கூறப்படுகிறது. இந்த நிலவிற்கு ‘அர்ஜுனா 2025 பி என்7’ (Arjuna 2025 PN7) என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கட்டும், விண்வெளியாக இருக்கட்டும் இவை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பேரதிசயங்கள் பலவற்றை கொண்டவையாகும். அப்படி, இந்த பூமி எப்படி உருவானது? பூமியின் ஒரே துணைக்கோளாக இருக்க கூடிய சந்திரன் உருவானது எப்படி? என்பது தொடர்பாக புதுப்புது தகவல்கள் விஞ்ஞான உலகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
Also Read : ரகசிய ஆவணங்கள் பதுக்கல்.. இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது!
அந்த வகையில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமியின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிலவை கண்டுபிடித்துள்ளனர். இந்த குவாசி மூன் (quasi-moon) ஆனது ஒரு சிறு கோள் என்பதால், பூமியை விட்டு வெகுதூரம் விலகிச்செல்லாமல் உள்ளது. அதோடு, இரண்டும் ஒரே வேகத்தில் பயணிப்பதால், பூமியை விட்டு விலகிச் செல்லவில்லை. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக பூமிக்கு அருகிலேயே சுற்றி வருகிறது. ஆனால், இது உண்மையான நிலவு அல்ல மாறாக சிறு கோள் ஆகும். நிலவு போல ஈர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்த விட்டாலும், பூமிக்கு துணையாக அருகிலேயே இருக்கிறது.
60 வருடங்களாக பயணித்து வரும் ’குவாசி மூன்’
இதனை 2025 ஆகஸ்ட் மாதத்தில்தான் கண்டறிந்துள்ளனர். ’குவாசி மூன்’ சுமார் 60 வருடங்களாகவே பூமியுடன் பயணித்து வருகிறது. இருப்பினும் உயர் ரக தொலைநோக்கிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்ததால்தான், தற்போது இந்த குவாசி மூன்-ஐ (quasi-moon) கண்டுகொள்ள முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also read: சைபர் மிரட்டல்.. ரூ.50 லட்சத்தை இழந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!
வழக்கமாக இதுபோன்ற சிறு நிலவுகள் பூமியை சில காலம் சுற்றிவரும் பிறகு காணாமல் போய்விடும். ஆனால்,‘குவாசி மூன்’ நீண்ட காலம் பயணித்து வருகிறது. அதோடு, பூமியின் வளிமண்டலம் மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையை விட்டு பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ’அர்ஜுனா 2025 பி என்7’ (Arjuna 2025 PN7) என அழைக்கப்படும் ‘குவாசி மூன்’ இருப்பதால், இதனால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



