2025: உலகின் சிறந்த காற்று தர குறியீட்டைக் கொண்ட டாப் 10 நகரங்கள் இதுதான்!
Cleanest air quality 2025: உலகில் சிறந்த காற்று தர குறியீட்டைக் கொண்ட 10 நகரங்களின் பட்டியல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதோடு, காற்று தரக் குறியீடு எந்த அளவில் இருந்தால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் அசுத்தமான காற்றையே சுவாசிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு வாகனங்களில் இருந்து வரும் நச்சுப்புகை, மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசுப்பாடு என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு அதிகரித்து வரும் மாசுபாட்டின் அளவை குறைக்க பல்வேறு நகரங்களும் போராடி வருகின்றன. அவ்வாறு இந்த நவீன காலத்திலும், தங்கள் நகரை மாசுப்பட விடாமல் சில நகரங்கள் பாதுகாத்து சிறந்த காற்று தர குறியீட்டைக் (AQI) கொண்டுள்ளன. அப்படி, உலகில் சிறந்த காற்று தர குறியீட்டைக் கொண்ட 10 நகரங்களின் விவரத்தை இங்கே காணலாம்.
மனிதர்கள் உட்பட உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை அளவீடும் முறையே காற்று தரக் குறியீடு எண் (AQI) எனக் கூறப்படுகிறது. இது மக்களுக்கு மாசுபட்ட காற்று ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில், காற்று மாசுபாட்டைக் கண்டறிய காற்றுத் தரக் குறியீடு எண்கள் 0 முதல் 500 வரை என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தெந்த அளவில் இருந்தால் ஆபத்தில்லாமல் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பதை இந்த அளவுகோள்கள் நமக்க உணர்த்தும்.
காற்று தரக் குறியீடு எண் எவ்வளவு இருக்க வேண்டும்?
அதன்படி, 0-50: ஆரோக்கியமான சூழல் மற்றும் குறைந்த பாதிப்பைக் குறிக்கிறது. 51 – 100: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு எளிதில் மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 100 -200: நுரையிரல், இருதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். 201-300: காற்று மோசமான நிலையை அடைந்து, ஏற்கனவே மூச்சுக் கோளாறு, இருதய பிரச்னை உள்ளவர்களின் நிலையை மோசமடையச் செய்கிறது. 301 -400: மிக மோசமான நிலை அடைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் நிலை மிக மோசமான நிலை அடைந்து பல விளைவுகளை ஏற்படுத்தும். 401-500: நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
Also read: 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!
இந்த காற்று தரத்தை அறிவதற்கு பல இடங்களில் தரக் கண்காணிப்பு நிலையங்கள் ஏற்படுதப்பட வேண்டும். அதோடு, ஒரு நாளில் மட்டும் எடுத்த அளவீடுகளை கொண்டு காற்று மாசு குறைந்துள்ளதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு ஆண்டில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பல்வேறு காலசூழல்களில் இத்தகைய அளவீடுகளை சரிவர மேற்கொண்டு, அந்த தரவுகளை ஒப்பாய்வு செய்தால் மட்டுமே எங்கு காற்று மாசு குறைவாக உள்ளது என்பதை அறிய முடியும். அவ்வாறு உலகில் சிறந்த காற்று தர குறியீட்டைக் (AQI) கொண்ட 10 நகரங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
ஓஸ்லோ, நார்வே,
அக்.24, 2025 நிலவரப்படி, ஒஸ்லோவின் காற்று தர குறியீடு (AQI) 1 ஆகும். இங்கு 89% மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவதால் காற்று மாசு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
டெட்ராய்ட், அமெரிக்கா
அக்.24, 2025 நிலவரப்படி, டெட்ராய்ட் பெருநகரப் பகுதி அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாகும். அக்.24, 2025 நிலவரப்படி, இங்கு காற்று தர குறியீடு (AQI) 8 ஆக உள்ளது. அந்த வகையில், இந்த ஆய்வு ஒருநாள் முடிவுகளை வைத்தே கூறப்படுகிறது.
அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
அல்ஜியர்ஸ் நகரத்திலும் காற்றின் தரம் பொதுவாக நன்றாக இருக்காது. எனினும், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில் இங்கு காற்று தர குறியீடு (AQI) 11ஆக உள்ளது.
டொராண்டோ, கனடா
டொராண்டோவிலும் காற்று தரக் குறியீடு நிலையில்லாமல் தான் இருக்கும். பல சமயங்களில் இங்கு ஆபத்தான அளவிலேயே காற்று தரக் குறியீடு இருக்கும். எனினும், அக். 24, 2025 நிலவரப்படி, இங்கு காற்று தரக் குறியீடு AQI 11 ஆகும்.
சிட்னி, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும், உலகளவில் உள்ள மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது சிட்னி தொடர்ந்து சிறந்த காற்று தரக் குறியீட்டை பெற்று வருகிறது. அக். 24, 2025 நிலவரப்படி, அதன் காற்று தரக் குறியீடு AQI மதிப்பு 16 ஆகும்.
கோலாலம்பூர், மலேசியா
டெட்ராய்ட் மற்றும் டொராண்டோவைப் போலவே, கோலாலம்பூரும் தொடர்ந்து சிறந்த காற்று தரக் குறியீட்டு மதிப்பைக் காட்டுவதில்லை. வறண்ட காலங்களில் அண்டை நாடுகளில், குறிப்பாக இந்தோனேசியாவில், நிலம் மற்றும் காடுகளை பெரிய அளவில் திறந்தவெளியில் எரிப்பதால் இந்நகரம் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனினும், அக்.24, 2025 நிலவரப்படி, இங்கு காற்று தரக் குறியீடு (AQI) மதிப்பு 17ஆக உள்ளது.
Also read: ‘என்ன காப்பாத்துங்க’.. சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்!
லிஸ்பன், போர்ச்சுகல்
லிஸ்பனும் நிலையான காற்று தரத்தை கொண்ட நகரமாக இருந்ததில்லை. எனினும், அக்.24, 2025 நிலவரப்படி, இங்கு காற்று தரக் குறியீடு (AQI) மதிப்பு 17ஆக உள்ளது.
வாஷிங்டன், அமெரிக்கா
வாஷிங்டன்னில் பெரும்பாலான சமயங்கள் காற்றின் மதிப்பு தரமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில், அக்.24, 2025 நிலவரப்படி, வாஷிங்டனின் காற்று தரக் குறியீடு (AQI) மதிப்பு 17 ஆகும்.
சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா
சால்ட் லேக் சிட்டியும் எப்போதும் ஒரு காற்று தரத்தை கொண்டிருப்பதில்லை. எனினும், அக்.24, 2025 நிலவரப்படி, சால்ட் லேக் சிட்டியின் காற்று தரக் குறியீடு (AQI) மதிப்பு 17 ஆகும்.
ஸ்கோப்ஜே, வடக்கு மாசிடோனியா
ஸ்கோப்ஜே நகரமும் அதன் மோசமான காற்றின் தரத்திற்குப் பெயர் பெற்றது, எனினும், அக்.24, 2025 நிலவரப்படி, ஸ்கோப்ஜேவின் காற்று தரக் குறியீடு (AQI) மதிப்பு 18 ஆகும்.



