‘என்ன காப்பாத்துங்க’.. சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்!
indian man cries for help from saudi arabia: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இந்திய இளைஞர் ஒருவர், உதவிக்கோரி கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பாஸ்போர்ட், விசாவை வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும், தனது ஊருக்கு திரும்பி செல்ல விட மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்று சிக்கி தவித்து வருகிறார். அவர் அங்கு பாலைவனத்தில் இருந்த படி தனது உயிரை காப்பாற்றும் படி வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை பதறச் செய்துள்ளது. உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாமலோ, அல்லது சரியான ஊதியம் இல்லாமலோ பெரும்பாலான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் இது சாதாரண விஷயம் தான். ஆனால், எப்படியாவது தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி, குடும்ப நிலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென நினைக்கும் பலர் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா, உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு கூலி வேலைக்கு சென்றாவது குடும்ப கஷ்டத்தை தீர்த்து விட வேண்டுமென என்னுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், அவ்வாறு உரிய கல்வித்தகுதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதென்பது சவாலான காரியமே.
வெளிநாட்டு வேலையும், ஏமாற்றமும்:




ஏனெனில், இதுபோன்று வேலைகளுக்கு செல்வபர்கள் நேரடியாக வெளிநாட்டில் உள்ள எந்தவொரு நிறுவனத்தையும் அணுகி அவர்களிடம் இருந்து விசா பெற்று செல்வதில்லை. மாறாக இதுபோன்ற லேபர் வேலைகளுக்கு செல்பவர்கள் ஏஜெண்டுகளை நம்பியே பணத்தை கட்டி வெளிநாட்டிற்கு செல்கின்றனர். இதில் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கும், பணம் செலுத்தியவர் வேலை வாங்கி தருவார் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது. மாறாக வேலை, விசா என அனைத்தும் வாங்கி கொடுத்தாலும், அவர்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு சென்றபின்பே அங்கு என்ன வேலையில் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பது தெரியவரும். அதுவரை ஏஜெண்ட் என்ன வேலை சொல்கிறோரோ அதற்கு தான் தாங்கள் செல்கிறோம் என்று நம்பும் நிலையே இருக்கும்.
Also read: ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இதுபோன்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பலர் கூறுவது இதையே, அங்கு அவர்கள் கொடுக்கும் அந்த வேலையை பார்க்க முடிந்தால், பிரச்சனையில்லை. அதுவே கடினமான வேலையாக இருப்பின் நிலைமை சிக்கல் ஆகிவிடுகிறது. இதுபோன்ற வேலைகளுக்கு செல்பவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் அவர்களின் பாஸ்போர்ட், விசாவை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவதும் உண்டு. அப்படி இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. பின் இந்திய தூதரகம் மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவங்களும் ஏராளம் நிகழந்துள்ளன.
சவுதியில் தவிக்கும் இளைஞர்:
இந்நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுபோல் சவுதி அரேபியாவில் தான் சிக்கிக் கொண்டதாக உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கல்பனா ஸ்ரீவஸ்தாவ் என்பவர் கண்ணில் தென்படவே, அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த அந்த இளைஞரை மீட்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞரின் வீடியோ:
माननीय विदेश मंत्री @DrSJaishankar जी तत्काल संज्ञान मे ले, प्रयागराज हंडिया प्रतापपुर का रहने वाला फंसा सऊदी अरब मे…
पार्ट 1 सभी भाई बहन इस वीडियो को शेयर करें ताकि इसकी सहायता हो पाए 🙏 pic.twitter.com/5op97otITq
— कल्पना श्रीवास्तव 🇮🇳 (@Lawyer_Kalpana) October 23, 2025
அந்த வீடியோவில், பாலைவனத்தில் இருக்கும் அந்த இளைஞர், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தன்னுடைய கிராமம் உள்ளதாக குறிப்பிடுகிறார். தான் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்ததாகவும், தன்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது என்றும் கூறுகிறோர். மேலும் தான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கேட்டதற்கு, தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, “நான் செத்துவிடுவேன், என் அம்மாவிடம் செல்ல வேண்டும், தயவு செய்து நான் இந்தியா திரும்ப உதவுங்கள். இந்த வீடியோவை அதிகமாக பகிருங்கள்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
இந்த வீடியோ குறித்து சவுதியில் உள்ள இந்திய தூதரகம் கூறியதாவது, அந்த இளைஞர் இருக்கும் இடத்தை கண்டறிய தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவர் எந்த மாகாணத்தில் இருக்கிறார், உரிமையாளர் யார் போன்ற எந்த விவரங்களையும் அவர் கூறாததால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த இளைஞரின் குடும்பத்தினர் குறித்த தகவல் தெரிந்தால் தங்களை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளது.