24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!
74-year-old man marries 24-year-old woman: இங்கே 90s கிட்ஸ் பலரும் தாங்கள் திருமணம் செய்ய பெண் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில், இந்தோனேசியாவில் 74 வயது முதியவர் ஒருவர், தன்னை விட 50 வயது குறைவாக உள்ள இளம்பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தோனேசியாவில் 74 வயதான முதியவர் ஒருவர் 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. அதோடு, இந்த திருமணத்தில் எதிர்பாராத திருப்பமாக திருமணம் முடிந்த கையோடு, மனைவியை அங்கேயே விட்டுவிட்டு அந்த முதியவர் தப்பிச்சென்றுவிட்டாராம். இந்த திருமணம் அதிகளவில் பேசப்படுவதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. அதாவது, இந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதற்கு அந்த முதியவர் அந்த பெண்ணிற்கு ரூ.2 கோடி பணமும் கொடுத்துள்ளார். அதோடு, நிற்கவில்லை, திருமண ஏற்பாட்டாளர்கள் பலருக்கு பணம் தராமலும் தப்பிச்சென்றுள்ளார். இப்படி அடுத்தடுத்த திருப்பங்களுடன் நடந்த இந்த விநோத திருமணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!




இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் பசிடன் ரீஜென்சியில், அக்டோபர் 1ஆம் தேதி இந்த ஜோடிகளின் திருமணம் ஆடம்பரமான முறையில் நிகழ்ந்துள்ளது. அந்த 74 வயது முதியவர் தர்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருமண் செய்துகொண்ட பெண் ஷெலா அரிக்கா (24) ஆவார். இந்த திருமணத்திற்காக முதலில் மணப்பெண் வீட்டாருக்கு வரதட்சணையாக இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் வீட்டாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், திருமண நாளில் திடீரென அந்த தொகையை ரூ.1.8 கோடியாக உயர்த்தி தரும்படி கேட்டுள்ளனர். அதனையும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டு பணத்ததை கொடுத்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களும் இவர்களுக்கு அதிகளவிலான ரொக்கத் தொகையை பரிசாக அளித்துள்ளனர்.
எனினும், திருமணம் முடிந்ததும் புகைப்படக்காரருக்கு அந்த தம்பதியினர் உரிய பணத்தை கொடுவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதியவர் தர்மனை அணுகுவதற்கு புகைப்படக்காரர் எவ்வளவோ முயன்றிருக்கிறார். ஆனால், அந்த முதியவரையும், அவரது மனைவியையும் (இளம்பெண்) தொடர்புகொள்ளவே முடியவில்லை. இதனிடையே, முதியவர் தர்மன் திருமணம் முடிந்த கையோடு, மனைவியை கைவிட்டு அவரது உறவினர் மோட்டார் பைக் ஒன்றை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது அவ்வளவு செலவு செய்து இளம் பெண்ணை திருமணம் முடித்து எதற்காக அவரை விட்டுச் சென்றார் என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
Also read: ‘என்ன காப்பாத்துங்க’.. சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்!
இங்கு தான் அடுத்த ட்விஸ்ட் நமக்கு காத்திருக்கிறது. ஆம், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதியவர் தர்மன், தான் மனைவியை கைவிட்டுச் செல்லவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதோடு, தாங்கள் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று கூறினார். இத்தகவலை மணப்பெண் வீட்டாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஹனிமூன் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, புகைப்படகாரருக்கு பணம் தராதது குறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.