Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?

Vegetarian Passenger Death : விமானத்தில் சைவ உணவு கேட்ட பயணிக்கு, அசைவ உணவு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, விமானம் அவசரமாக தரையிறங்கியது. பயணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Oct 2025 12:49 PM IST

கத்தார்,  அக்டோபர் 09 : கத்தார் விமானத்தில் பயணித்த 85 வயது முதியவர் அசைவ உணவு சாப்பிட்டதால் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சைவ உணவு கேட்ட நிலையில், அது இல்லாததால் விமான ஊழியர்கள் அசைவ உணவை கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜூலை 2023 இல் லாஸ் ஏஞ்சல்ஸ்-கொழும்பு விமானத்தில் நடந்தது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் நிபுணர் அசோகா ஜெயவீர (83) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கொழும்புக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் அசோக ஜெயவீரா கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இருந்து இலங்கை செல்ல 15 மணி நேரமாகும்.

இந்த பயணத்தின்போது தனக்கு சைவ உணவு வேண்டும் என்று கூறி டிக்கெட் புக் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அசைவ உணவு தான் வழங்கப்பட்டது. சைவ உணவு இல்லை என கூறிய விமானி, அசைவ உணவை கொடுத்துள்ளார். இறைச்சியை தவிர்த்துவிட்டு, மற்றதை சாப்பிடவும் விமான பணிப்பெண் அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, அசைவ உணவை சாப்பிட்ட ஜெயவீராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனை அடுத்து, விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியது.

Also Read : தீராத முதுகுவலி.. 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி.. அடுத்து நடந்த ஷாக்!

அசைவ உணவு சாப்பிட்டவர் பலி

ஜெயவீரா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆஸ்பிரேஷன் நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை அடுத்து உயிரிழந்த ஜெயவீர மகன் சூர்யா ஜெயவீர கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

உணவு சேவை மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டினார். முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவை விமான நிறுவனம் வழங்கத் தவறியதாகவும், ஜெயவீராவின் மருத்துவ அவசரநிலைக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்றும் வழக்கு தொடர்ந்தார். இதற்கு இழப்பீடாக 128, 821 அமெரிக்கா டாலரை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Also Read : 2025 ஆம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு – அமெரிக்க – ஜப்பான் விஞ்ஞானிகள் தேர்வு

விமானத்தில் உணவு தொடர்பான குளறுபடிகள் நடப்பது இது முதல்முறையல்ல. பிரிட்டிஷ் ரியாலிட்டி நட்சத்திரம் ஜாக் ஃபோலர் நட்ஸ் அலர்ஜி கொண்டவர். 2024ஆம் ஆண்டு கத்தர் ஏர்வேஸ் விமானத்தில் துபாய் சென்றபோது, நட்ஸ் இருக்கும் சிக்கனை அவருக்கு கொடுத்துள்ளனர். இதனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர்  மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.