11 அடி உயர்த்தில் பாராசூட்டில் பறந்துக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்த இளைஞர்.. அதிர்ஷவசமாக உயிர் பிழைத்தார்!
Youth Survives 11 Foot Parachute Fall | பொதுமக்கள் மத்தியில் பாராசூட் உள்ளிட்ட சாகசங்களை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி பாராசூட்டில் பறந்த இளைஞர் சுமார் 11 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கிய நிலையில், பலத்த காயமடைந்தார்.

வாஷிங்டன், அக்டோபர் 03 : அமெரிக்காவை (America) சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்ற நிலையில், பாராசூட்டில் (Parachute) இருந்து கிழே விழுந்து கடும் விபத்தில் சிக்கியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் அதிர்ஷவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த நிலையில் 11 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இருந்தபோது பாராசூட்டில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரி பிழைத்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாராசூட்டில் இருந்து கீழே விழுந்த இளைஞர் – உயிர் பிழைத்தார்
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் லாஸ் வேகாஸ் பகுதி உள்ளது. இது பாராசூட் உள்ளிட்ட சாகசங்களை மேற்கொள்ள ஏற்ற இடமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் மிட்செல் டீக்கின் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் அந்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அனைவரும் பாராசூட்டில் பறந்துக்கொண்டு இருப்பதை கண்ட அவர், தானும் பாராசூட்டில் பறந்துள்ளார்.
இதையும் படிங்க : நண்பனின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்.. இப்படி ஒரு காதல் கதையா?




11 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த இளைஞர்
அந்த இளைஞர் பாராசூட்டில் பறந்துக்கொண்டு இருந்தபோது, திடீரென அது செயலிழந்துள்ளது. இதன் காரணமாக அந்த இளைஞர் சுமார் 11 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். 10 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலே உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், 11 அடி உயரத்தில் இருந்து விழுந்த அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையும் படிங்க : துரு பிடிக்கும் நிலவு.. பூமிதான் முக்கிய காரணம்.. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய நிகழ்வு!
விமானம் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
இளைஞருடன் பாராசூட்டில் பயணம் செய்த பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாராசூட்டில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிர் தப்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.