Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நண்பனின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்.. இப்படி ஒரு காதல் கதையா?

Man Married Friend's Mother in Japan | ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரின் தாயான 54 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், அவர் போராடி அவரை திருமணம் செய்துள்ளார்.

நண்பனின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்.. இப்படி ஒரு காதல் கதையா?
திருமணம் செய்துக்கொண்ட ஜோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2025 08:12 AM IST

ஷிசுவோகா, செப்டம்பர் 29 : ஜப்பானை (Japan) சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய இளைஞரின் வீட்டார் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும், தன்னை விட 21 வயது மூத்த பெண்ணை அந்த இளைஞர் போராடி திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்த இளைஞர் தனது நண்பனின் தாயை திருமணம் செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நண்பனின் தாயை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்

ஜப்பானில் உள்ள ஷிசுவோகா மாகாணத்தை சேர்ந்தவர் இசாமு டோமியோகா. 33 வயதான இவர், தனது நண்பரின் தாயான மிடோரி என்ற 54 வயது பெண்ணை பல ஆண்டுகளுக்கு பிறகு தற்செயலாக சந்தித்துள்ளார். அப்போது இசாமுக்கு, தனது நண்பரின் தாய் கணவனை இழந்து மகன் மற்றும் பேரக் குழந்தையுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் இசாமுக்கு முதலில் அவர் மீது இரக்கம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில், அது இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகசா புயல்.. 17 பேர் பலி.. 20 லட்சம் பேர் பாதிப்பு!

திருமணம் செய்ய முடிவு செய்த ஜோடி

இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இசாமு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என மிடோரியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆரம்பத்தில் மிடோரி மறுப்பு தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், இசாமுவின் குடும்பத்திற்கு இதில் துலி அளவும் விருப்பமில்லாமல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு.. தைவான் அரசு அதிரடி அறிவிப்பு!

மிடோரிக்கு ஏற்கனவே 54 வயது ஆகிறது. அவரால் இனி ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே நீ உன் வயது உடைய ஒருவரை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் இசாமுவின் வீட்டார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத இசாமு தான் காதலித்த தனது நண்பனின் தாயான 54 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.