இஸ்லாமிய மதப்பள்ளி இடிந்து விழுந்து விபத்து.. 13 மாணவர்கள் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!
Indonesia Seminary Collapse | இந்தோனேசியாவில் இஸ்லாமிய மதப்பள்ளி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 13 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த பகுதியில் நான்கு நாட்களுக்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஜகார்தா, அக்டோபர் 04 : இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள இஸ்லாமிய மதப்பள்ளி ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், மதப்பள்ளி இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இஸ்லாமிய மதப்பளி இடிந்து விழுந்து விபத்து – 13 மாணவர்கள் பலி
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடொர்ஜா நகரில் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று அங்கு சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத வழிபாடு நடத்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : குலுங்கிய கட்டிடங்கள்.. பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. 22 பேர் பலி!




4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்
மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், உள்ளே வழிபாடு செய்துக்கொண்டு இருந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களாக அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை அங்கு 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : நண்பனின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்.. இப்படி ஒரு காதல் கதையா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்
அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் , காயமடைந்துள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.