Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குலுங்கிய கட்டிடங்கள்.. பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. 22 பேர் பலி!

Philippines Earthquake : பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்,100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குலுங்கிய கட்டிடங்கள்.. பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. 22 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 06:28 AM IST

பிலிப்பைன்ஸ், அக்டோபர் 1 : பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் உ யிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருகின்றனர். அண்மையில் கூட, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸில் 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான இரவு 6.9 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 90,000 மக்கள் வசிக்கும் கடலோர நகரமான போகோவிலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால், மக்கள் அலறி அடித்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மக்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் மரங்கள் விழுந்தும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read : நண்பனின் தாயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளைஞர்.. இப்படி ஒரு காதல் கதையா?

22 பேர் உயிரிழப்பு


இந்த நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும்,  தற்போது இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகள்  தொடர்ந்து   நடந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி, இரவு 9.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  தற்போது  அங்கு மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை  அதிகரிக்கக் கூடும் அஞ்சப்படுகிறது.

Also Read : போர் முடிந்ததும் பதவி விலகி விடுவேன்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்திற்குப் பிறகு பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. செபு, லெய்ட் மற்றும் பிலிரான் ஆகிய இடங்களில் உள்ள கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் 1 மீட்டர் (3 அடி) வரை அலைகள் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டிற்குள் செல்லுமாறு அறிவுறுத்தியது. அதன்பிறகு சில மணி நேரங்களுக்கு பிறகு, சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. அசாதாரண அலை எதவும் கண்டறியப்படாமல் இருப்பதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.