Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்.. ராணுவத்தில் இணைக்கப்பட்ட கொடூரம்.. கண்ணீர் மல்க வீடியோ பதிவு!

Hyderabad Man Forced into Russian Army | ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டு அவர் ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட கொடுமை படுத்தப்படுவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்.. ராணுவத்தில் இணைக்கப்பட்ட கொடூரம்.. கண்ணீர் மல்க வீடியோ பதிவு!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Oct 2025 08:24 AM IST

ஐதராபாத், அக்டோபர் 24 : தெலங்கானா (Telangana) மாநிலம் ஐதராபாத்தை (Hyderabad) சேர்ந்தவர் முகமது அகமது. இவருக்கு திருமணமாகி அப்சா பேகம் என்ற மனைவியும், சோயா பேகம் என்ற 10 வயது மகளும், முகமது தைமூர் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக முகமது அகமது ரஷ்யாவுக்கு (Russia) வேலைக்காக சென்றுள்ளார். வேலைக்கு சென்ற அவரை அந்த நாட்டு அரசு ராணுவத்தில் இணைத்து ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமையை அனுபவித்து வருவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அப்சா, வெளியுறவுத்துரைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட முகமது அகமது

தனது கணவர் ரஷ்யா ராணுவத்தில் இணைக்கப்பட்டு கொடுமை அனுபவித்து வருவதாக அப்சா புகார் அளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து முகமது கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில் ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். நான் இருக்கும் இடத்தில் போர் நடைபெற்று வருகிறது. நானும் என்னுடன் சில இந்தியர்களும் இணைந்து மண்டலத்திற்கு செல்ல மறுத்துவிட்டோம். அவர்கள் எங்களை சண்டையிட மிரட்டினர். ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தினர் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நடுவானில் பறந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. அலறிய பயணிகள்!

கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர் – அகமது முகமது

என் காலில் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளது. என்னால் நடக்கமுடியவில்லை. என்னை இங்கு அனுப்பிய நபரை விட்டு விடாதீர்கள். அவர் என்னை சிக்கலில் சிக்க வைத்தார். வேலை இல்லாமல் 25 நாட்கள் இங்கேயே இருக்க வைத்தார். நான் அவரிடம் தொடர்ந்து வேலை கேட்டுக்கொண்டே இருந்தேன். ரஷ்யாவில் வேலை வாய்ப்பு என்ற போர்வையில் நான் மிகவும் வலுகட்டாயமாக இதில் இழுக்கப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.