Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Afghan Cricketers: பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

Pakistan Airstrike: பாகிஸ்தான் எல்லையில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் உட்பட 8 பேர் பலியாகினர். பாகிஸ்தான் அரசின் கோழைத்தனமான தாக்குதலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சித்துள்ளது.

Afghan Cricketers: பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி
உயிரிழந்த வீரர்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Oct 2025 09:42 AM IST

ஆப்கானிஸ்தான், அக்டோபர் 18: பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்புரீதியான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் பயணம் மேற்கொண்ட போது இந்த தாக்குதல் நடந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என 3 வீரர்கள் மட்டுமல்லாது அந்த தாக்குதலில் மேலும் 5 பேர் என 8 பேர் பலியானதாக கூறியுள்ளது.

Also Read:  முடிவுக்கு வந்த போர்.. வீடு திரும்பும் பணயக் கைதிகள்.. இஸ்ரேல் விரைந்த அதிபர் டிரம்ப்..

இது பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான தாக்குதல் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நவம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகியுள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ரஷீத் கான் வரவேற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்

இதனிடையே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் இன்று மாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் துயரமான தியாகத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Also Read: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 மாணவர்கள் பரிதாப பலி; 12 பேர் படுகாயம்

உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பாகிஸ்தான் நாட்டு வீரர்களுடன், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று வீரர்களான கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் வீரமரணம் அடைந்தனர், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இது ஆப்கானிஸ்தானின் விளையாட்டு சமூகம், அதன் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்திற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் எனவும், மேலும் இந்த வீரர்களின் மரணத்தால் துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு பொறுமை, வெகுமதி மற்றும் பலத்தை வழங்க வேண்டும் எனவும் இறைவனை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.