சீனாவுக்கு பெரிய தலைவலி.. 100 சதவீதம் வரியை அறிவித்த டிரம்ப்.. என்ன மேட்டர்?
US Tariffs On China : 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுககு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

அமெரிக்கா, அக்டோபர் 11 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது கூடுதாக 100 சதவீத வரி விதிப்பதாகவும், அனைத்து முக்கியமான பொருட்கள் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்பதாக அவர் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவு உலகளாவிய வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதிவியேற்றத்தில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, உலக நாடுகள் மீது அதிகப்படியாக வரிகளை விதித்து வருகிறார். இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சீனா மீது மேலும் 100 சதவீத வரியை டிரம்ப் விதித்து அறிவித்துள்ளார். இது அமெரிக்கா சீனா வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். அதோடு, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதல் தீவிரம் அடைந்துள்ளது.




2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 100 சதவீதம் வரி யை விதிக்கும் என்று டிரம்ப் கூறினார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா சீனாவின் மீது 100% வரியை விதிக்கும். நவம்பர் 1 ஆம் தேதி, எந்தவொரு மற்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்” என்றார்.
Also Read : டிரம்ப்பிற்கு இல்லை… அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. யார் இந்த மரியா கொரினா?
100 சதவீதம் வரியை அறிவித்த டிரம்ப்
US President Donald J. Trump announces 100% tariffs on China, in addition to any tariffs they are currently paying, and export controls on all critical software, starting November 1. pic.twitter.com/Cu1ibmVAQd
— ANI (@ANI) October 10, 2025
வரி விதிப்பால் இரு நாடுகளுக்கான இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவில் நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். ஆனால், இதற்கு சீன அதிபர் ஜின்பிங் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் சீனா மீது 100 சதவீதம் வரியை அறிவித்தார். ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30 சதவீதம் வரி இருக்கும் நிலையில், தற்போது மொத்தம் 135 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை ரத்து செய்யவில்லை.
Also Read : அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்ப் தான் தகுதியானவர் – பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்..
ஆனால் நாங்கள் செய்வோமா என்று தெரியவில்லை” என்றார். 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் டிரம்ப சீன பொருட்களுக்கான வரிகளை உயர்த்திய பிறகு, சீனா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இருந்தது. சமீபத்தில் கூட, அரியவகை கனிமங்கள் வர்த்தகத்தில் சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், அமெரிக்காவுக்கான கனிமங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. இப்படியாக அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.