சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேர் உடல் சிதறி பலி!
Plane Crashed into Vehicles on Road in America | அமெரிக்காவின் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த வாகனங்கள் மீது விமானம் ஒன்று விழுந்து நொருங்கி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன், அக்டோபர் : அமெரிக்காவில் (America) கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்து நொருங்கியதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியே கடும் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், விமானம் விழுந்து நொருங்கிய கொடூர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. விமானம் டாரன் என்ற இடத்திற்கு சென்றபோது, விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன் காரணமாக, வானத்தில் சென்றுக்கொண்டு இருந்த விமானம், கீழே சாலையில் சென்றுக்கொண்டு இருந்த வாகனங்கள் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : பிலிப்பைன்ஸில் 7.6 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை
உடல் சிதறி பலியான இரண்டு பேர்
வானத்தில் சென்றுக்கொண்டு இருந்த விமானம் சாலையின் மீது விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விமான விபத்தின் காரணமாக சாலையில் சென்ற கார்கள் மற்றும் லாரிகள் தீப்பிடித்து எறிய தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?
பல மணி நேரம் போராடி அணைக்கப்பட்ட தீ
விமானம் விழுந்து நொருங்கியதால் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதியே கடும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பசம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விமான போக்குவரத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.