Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிரியையின் வீட்டில் தங்கி கொடூர செயலில் ஈடுபட்ட மாணவர்கள் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!

Gang of School Students Tortured Teacher | ஆஸ்திரியாவை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவருடன் உடலுறிவில் இருப்பது தொடர்பான வீடியோவை அந்த மாணவர் சக மாணவர்களுடன் பகிர்ந்த நிலையில், அந்த மாணவர்கள் கும்பல் ஆசிரியரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளது.

ஆசிரியையின் வீட்டில் தங்கி கொடூர செயலில் ஈடுபட்ட மாணவர்கள் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Oct 2025 19:37 PM IST

வியன்னா, அக்டோபர் 11 : ஆஸ்திரியா நாட்டில் வசித்து வருபவர் 28 வயதான பள்ளி ஆசிரியை. இவர் அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் அந்த 17 வயது மாணவரை அந்த ஆசிரியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து பலமுறை அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். நாளாடைவில் ஆசிரியை, மாணவருக்கு இடையேயான உறவு தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொண்டுள்ளனர்.

ஆசிரியை உடன் இருப்பதை வீடியோ பதிவு செய்த மாணவர்

இவ்வாறு ஆசிரியை உடன் உடலுறவு வைப்பதை அந்த மாணவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த வீடியோவை மாணவர் வேறு சில மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதனை கண்ட சக மாணவர்கள் கும்பலாக ஆசிரியையின் வீட்டுக்கு சென்று அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?

வீடியோவை வெளியே விட்டுவிடுவோம் என மிரட்டி வந்த கும்பல்

14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடங்கிய அந்த கும்பல் ஆசிரியையின் வீட்டில் தங்கி குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது. அவர்கள் ஆசிரியையின் வீட்டில் ஏராளமான போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். தாங்கள் ஒரு குற்றவாளி கும்பல் என கூறியே அவர்கள் ஆசிரியரை மிரட்டி வந்துள்ளனர். நடப்பதை வெளியே கூறினால் மாணவர்கள் வீடியோவை வெளியிட்டுவிவார்களோ என்ற அச்சத்தில் அந்த ஆசிரியையும் எதையும் வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : தீராத முதுகுவலி.. 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி.. அடுத்து நடந்த ஷாக்!

பகலில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அந்த கும்பல் இரவில் வீடியோக்களை காட்டி, மிரட்டி ஆசிரியரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது. உணவு, வாடகை, மதுபானம், சிகிரெட் என தங்களது அனைத்து தேவைகளுக்காகவும் அந்த கும்பல் ஆசிரியையிடம் இருந்து தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளது. தனியாகவும், கும்பலாகவும் அந்த கும்பல் ஆசிரியையை மிரட்டி உடலுறவில் இருந்து வந்துள்ளது. அதனையும் வீடியோ பதிவு செய்து வெளியில் விட்டிவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளது.

பிறகு அந்த கும்பல் முடிந்த அளவு ஆசிரியையிடம் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய அந்த கும்பல் கிளம்புவதற்கு முன்னதாக ஆசிரியையின் வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி வேண்டி அந்த ஆசிரியையை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது ஆசிரியையின் சம்மதத்தின் அடிப்படையில் தான் பாலியல் உறவு நடைபெற்றதாக மாணவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.