நடுவானில் பறந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. அலறிய பயணிகள்!
Fire Accident in Flight in Mid Air | சீனாவில் இருந்து தென் கொரியா நோக்கி விமானம் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பீஜிங், அக்டோபர் 19 : சீனாவின் (China) செஜியாங் மாகாணத்தில் இருந்து தென் கொரியாவின் (South Korea) தலைநகரான சியோலுக்கு நேற்று (அக்டோபர் 18, 2025) காலை ஏர் சீனா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது விமானத்திற்குள் பயணிகளின் இருக்கைக்கு மேல் உடைமைகளை வைக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது.
கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பயணிகள்
விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருக்கும்போது நடுவானில் தங்களது தலைக்கு மேல் தீ பிடித்து எரிவதை கண்டு பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், இந்த சிக்கலை அறிந்துக்கொண்ட விமான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைந்துள்ளனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.




இதையும் படிங்க : கோல்ட்ரிஃப் மட்டும் இல்லை.. இந்த 3 மருந்துகளுக்கும் தடை.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
நடுவானில் பறந்தபோது தீ பிடித்து எரிந்த விமானம்
Today, an Air China flight (CA139) from Hangzhou to Incheon was forced to make an emergency landing in Shanghai, China, after a lithium battery in a passenger’s overhead bag caught fire. pic.twitter.com/emRolEYbmj
— Weather Monitor (@WeatherMonitors) October 18, 2025
இந்த விபத்தை தொடர்ந்து விமானம் அவசர அவசரமாக ஹாங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது பையில் லித்தியம் பேட்டரி வைத்திருந்ததும் அது சூடாகி இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேர் உடல் சிதறி பலி!
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுவானில் பறந்த விமானம் தீ பற்றி எரிவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.