Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூரியனில் மழை பொழிகிறதாம்.. அது எப்படி?.. விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Rain on the Sun Truth Revealed | சூரியனில் மழை பொழிந்து வருவது நீண்ட காலமாக விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சூரியனில் மழை பொழிவது ஏன் என்பதற்கான விடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.

சூரியனில் மழை பொழிகிறதாம்.. அது எப்படி?.. விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2025 19:40 PM IST

பூமிக்கு இரண்டு கணகளை போல செயல்பட்டு வரும் சூரியன் மற்றும் நிலவை மையப்படுத்தி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சூரியனில் ஏன் மழை பொழிகிறது என்பதற்கு விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்துள்ளனர். சூரியனில் மழையா என உங்களுக்கு சந்தேகம் எழலாம். உண்மையாகவே சூரியனில் மழை பொழிந்து வருகிறது. அது குறித்த முக்கிய தகவல் ஒன்றை தான் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூரியனில் மழை பொழிவு

சூரியனில் மழை பொழிவது என்பது பூமியில் நீர் துளிகள் மழையாக பொழிவது போல் இல்லை. அது முற்றிலும் மாறுபட்டது. சூரிய மழை என்பது அதன் வெளி பகுதியான கரோனாவில் ஏற்படுகிறது. இது மிகவும் வெப்பமான பிளாஸ்மா பகுதியாக உள்ளது. சூரியனில் மழை பொழியும்போது, குளிர்ந்த மற்றும் அடர்த்தியான பிளாஸ்மா கட்டிகள் கரோனா மீது எழும்பி, பிறகு மீண்டும் சூரியனை நோக்கி இறங்கும்.

இதையும் படிங்க : பிலிப்பைன்ஸில் 7.6 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

இந்த சூரிய மழை குறித்து இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சுட்டெரிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில் குளிர்ச்சியான பிளாஸ்மா மேலே எழும்பி மீண்டும் மழையை போல சூரியனை நோக்கிச் செல்லும். சூரியனில் மிக கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், இது எப்படி நடைபெறுகிறது என்று ஆய்வாளர்களுக்கு நீண்ட கால சந்தேகம் இருந்து வந்தது. தற்போது அதற்குதான் விடை கிடைத்துள்ளது.

சூரியனில் மழை பொழிய என்ன காரணம்?

சூரியனில் மழை பொழியும் இந்த நீண்ட நாள் மர்மத்திற்கு வானியலாளர் ஜெஃப்ரி ரீப் மற்றும் லூக் பெனாவிட்ஸ் ஆகியோரை இணைந்து பதிலை கண்டு பிடித்துள்ளனர். சூரியனின் வெளிப்புற பகுதியான கரோனாவில் உள்ள பல்வேறு தனிமங்கள் பல காலமாக அப்படியே இருக்கும் என்றே இத்தனை காலமாக நாம் கருதினோம். ஆனால், அது உண்மை இல்லை என்றும் அவை இரும்பு போன்ற துகல்களாக காலப்போக்கில் மாறுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?

இரும்பு போன்ற துகல்களின் காரணமாகவே சூரியனில் மழை பொழிகிறது என்று விஞ்ஞானிகள் செயல்முறை விளக்கத்துடன் விளக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.