2025ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்… நேரம் என்ன? இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
Partial Solar Eclipse 2025 : 2025ஆம் ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் 2025 செட்படம்பர் 22ஆம் தேதியான நாளை நிகழ்கிறது. இந்திய நேரப்படி, செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 10:59 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 1:11 மணிக்கு முழு சூரிய கிரகணம் உச்சத்தில் அடையும்.

டெல்லி, செப்டம்பர் 21 : 2025ஆம் ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று நிகழ்கிறது. இதுவே இந்தாண்டின் (2025) இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணமாகும். இது எப்போது நிகழ்கிறது. இதனை இந்தியாவில் பார்க்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். பூமியில் நடக்கும் சந்திரன், சூரியனை மறைக்கும் நிகழ்வு மனிதர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தும். பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது, அரிய நிகழ்வு நடக்கிறது. சமீபத்தில் நடந்த சந்திர கிரகணம் உலகம் முழுவதும் பெரும் கவனம் பெற்றது. ஒவ்வொரு முறையும் சந்திர கிரகணம் நிகழ்ந்த சில நாட்களில் சூரிய கிரகணம் நடக்கும். அதன்படி, 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது.
இதுவே 2025ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். முதலாவது சூரிய கிரகணம் 2025 மார்ச் 29 அன்று நிகழ்ந்தது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரியனின் ஒளியில் பூமியில் நிகழ்வதை தடுக்கிறது. சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே சந்திரன் மறைக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 10:59 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 1:11 மணிக்கு முழு சூரிய கிரகணம் உச்சத்தில் அடையும்.
Also Read : ரஷ்யாவை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு!




சூரிய கிரகணத்தை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
2025ஆம் ஆண்டில் கடைசி சூரிய கிரகணத்தை உலகின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வானத்தில் பிறை வடிவ சூரியனைக் பார்க்க முடியும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். சில பகுதிகளில் சந்திரன் சூரியனின் 85 சதவீத வரை மறைக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், மற்ற நாடுகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
நியூசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா, தென் பசிபிக் தீவுகள் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் காலை 4:49 முதல் மாலை 6:53 வரையும், ஆஸ்திரேலியாவில் காலை 6:13 முதல் காலை 7:36 வரை மற்றும் நியூசிலாந்தில் காலை 5:41 முதல் காலை 8:36 வரை தெரியும்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாதாம். சூரிய கிரணத்தை கண்களில் கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும், சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்றும் கூறுகின்றனர். ஜோதிடத்தின்படி, 2025 செப்டம்பர் 22ஆம் தேதி கன்னி ராசியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஜோதிடத்தின்படி, இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.